மேலும் அறிய

நாமக்கல் சம்பவம்.. 7 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. இபிஎஸ், டிடிவி தினகரன் விமர்சனம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நாமக்கல் கொடூர சம்பவம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பேக்கரியில் வேலை செய்து வரும் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் 7 வயது மகள் நேற்று முன்தினம் (மார்ச் 7) இரவு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியைக் காணவில்லை. சிறிது நேரத்தில் அழுதுக்கொண்டே அந்த சிறுமி மீண்டும் வீட்டுப்பக்கம் வந்துள்ளார். அப்போது சிறுமியின் ஆடையில் இரத்தக்கறை இருப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுமி வீட்டு அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தீவிர விசாரணையில் அந்த இளைஞர் மணிகண்டன் என்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் மணிகண்டனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

இந்த நிலையில் நாமக்கலில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு  , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளதாக,  உலகமகளிர்தினத்தன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள்ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு,  "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா? . இந்த வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் , அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரனின் கண்டன பதிவு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி - பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பெண் இனத்தின் காவலர் வேஷம் போடுவது வெட்கக் கேடானது.  உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல்லில் ஏழு வயது சிறுமிக்கு நடந்தேறியிருக்கும் இந்த கொடுமையான நிகழ்வு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டு, பெண்ணுரிமை பேசுவதும், பெண் இனத்தின் காவலர் போல முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது வெட்கக் கேடானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
exclusive ;
exclusive ; "எனக்கும் 'சுந்தர் சி'க்கும் போட்டியில்லை... பிடிஆர் உடன் தான் நேரடி போட்டி" - தவெக வேட்பாளர் முஸ்தபா சரவெடி !
மாட்டு வண்டியில் சென்று திமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பு !
மாட்டு வண்டியில் சென்று திமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பு !
மூன்று நாள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தீர்கள் ;சுந்தர் சியிடம் - நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி !
மூன்று நாள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தீர்கள் ;சுந்தர் சியிடம் - நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
Embed widget