MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?
பாவ புன்னியத்தை கத்துக்கொள்ளாமல் மாணவர்கள் எப்படி வாழ்க்கையை கற்றுக்கொள்வார்கள் என்று அரசுப்பள்ளி மேடையில் மாணவர்கள் மத்தியில் விருந்தினர் ஒருவர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வருவது புகைச்சலை மேலும் கூட்டியுள்ளது.
இந்நிலையில் கலக்கப்போவது யாரில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான மதுரை மகா எப்படி மகா விஷ்ணுவாக அவதாரம் எடுத்தார் என்ற கதை சுவாரசியமானது..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் மகா விஷ்ணு. சிறு வயதிலிருந்தே அனைவரும் ரசிக்கும் வகையில் சுட்டியாக பேசி சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர். இவருடைய திறமையை கண்டு பாராட்டிய பலர் நல்லா பேசுறியே என பூஸ்ட் கொடுக்க, ஸ்டாண்ட் அப் காமெடியனாக விஜய் டிவி நடத்திய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகாவாக களமிறங்கினார் இவர். அங்கேயும் இவரின் வெடி பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, தன்னை ஒரு காமெடி கலந்த மேடை பேச்சாளராக உருவாக்கிக் கொள்கிறார்.
ஆனால் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்றால் காமெடி செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது என்பதை உணர்ந்த மதுரை மகா, தன்னுடைய பேச்சு ஆன்மீகத்தையும் கலந்து, ஆன்மீக சொற்பொழிவாளராக மாறுகிறார்.
எப்படி நித்தியானந்தாவிற்கு திருவண்ணாமலையில் முக்தி கிடைத்ததோ, அதேபோன்று காஞ்சி விஸ்வநாத சுவாமி ஜீவசமாதிகள் முக்தி கிடைத்ததாக சொல்கிறான்.
இங்கே தான் மதுரை மகா, கலியுகத்தில் மகா விஷ்ணுவாக அவதாரம் எடுக்கிறார். இங்கிருந்து அவருடைய கிராப் எகிற தொடங்குகிறது, தன்னுடைய பாதையை மாற்றும் அவர், பரம்பொருள் அறக்கட்டளையை தொடங்கி, பக்தர்களின் ஆன்மீக தேடலுக்கு வழிகாட்ட தொடங்குகிறார்.
பணத்தை பெருக்க வேண்டுமா, வாழ்க்கையில் நிம்மதியாகவும் புற்றுணர்ச்சியாகவும் உணர வேண்டுமா, அற்புதமான இறை அருளை பெற வேண்டுமா, வாழ்வில் எண்ணிய அனைத்தையும் பெற, வாருங்கள் அறிவுச்சுடரின் பாதையில்.. மகாவிஷ்ணுவின் பரம்பொருள் யோகம்.
ஒரு நாள் பயிற்சி வகுப்புக்கு 8000 முதல் 10 ஆயிரம் ரூபாயும், இதிலேயே சில அட்வான்ஸ் 6 மாத கோர்ஸ் எல்லாம் சேர்த்து லட்சம் ரூபாய் மேல் கல்லா கட்டியுள்ளார் மகாவிஷ்ணு.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆன்மீக வகுப்பு எடுக்கத் தொடங்கிய மகாவிஷ்ணு அப்படியே இலங்கை ஆஸ்திரேலியா சிங்கப்பூர் துபாய் என பல நாடுகளுக்கு பறந்துள்ளார். ஸ்ட்ரெஸ் ரிலீஃப் கொடுக்க குருஜி மகாவிஷ்ணு வருகிறார், என்று இவரின் போதனைகளைக் கேட்க பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
அதே நேரம் சமுதாயத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தன்னுடைய பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல் விளையாட்டு வீரர்களுக்கு உதவி, பள்ளி கட்டடங்களை சீரமைத்தல், மரக்கன்று நடுதல் மருத்துவ உதவி என பல்வேறு விஷயங்களை செய்து வள்ளலாக உருவெடுக்கிறார். இதனால் ஆன்மீக சொற்பொழிவாளர், மேடைப் பேச்சாளர், உதவும் மனம் படைத்த வள்ளல் என தவிர்க்க முடியாத நபராக வலம் வர தொடங்குகிறார் மகாவிஷ்ணு.
இவரிடம் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், கோடீஸ்வரர்கள், மாணவர்கள் என பலர் வகுப்புகளில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில்தான் சிறுவயதிலேயே ஞானத்தை பெற வழி காட்டுவதாக கூறி அரசு பள்ளிகளிலும் தனது சொற்பொழிவை நடத்தியுள்ளார் மகாவிஷ்ணு. நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, மாணவர்களுக்கு யோக தீட்சை தருவதாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில்தான் அசோக் நகர் அரசு பள்ளிகள் மறுபிறவி பாவ புண்ணியம் என்று மகாவிஷ்ணு பேசிக் கொண்டிருந்தபோது அரசு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஏன் ஆன்மீகத்தை போதிக்கிறீர்கள் என ஆசிரியர் கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதசார்பின்மையை கொள்கையாக கொண்டுள்ள அரசும், அறிவியல் ரீதியாக மாணவர்களை சிந்திக்கத் தூண்டவும் கற்பிக்க வேண்டிய அரசும், மத போதனையை ஊக்குவிப்பதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர்.
குறிப்பாக தமிழக பாடநூல்களின் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அந்நூல் மகேஷ் உட்பட, பல அமைச்சர்களை மகாவிஷ்ணு சந்தித்திருந்தார். இந்நிலையில் அந்த புகைப்படங்களும் தற்போது பரவி, புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது.