சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமொருவை இன்று இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவும், ராஜும் காதலித்து வருவதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக அவர்கள் அமைதி காத்து வந்த நிலையில், இருவரும் கட்டி அணைத்தபடி எடுத்த புகைப்படங்களை கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா வெளியிட்டார். இதன் மூலம் அவர்கள் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியானதாக்க கூறப்பட்டது. இருவரும் தி ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப்தொடர்களில் சேர்ந்து பணியாற்றி உள்ளனர்.
இந்தநிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் சமந்தா மற்றும் ராஜ் ஜோடி, திங்கட்கிழமையான இன்று திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக இல்லாவிட்டாலும் , சமூக வலைதளங்களில் பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். ஆனால்,சமந்தா மற்றும் ராஜ் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை இல்லை.
நடிகை சமந்தாவை இயக்குனர் ராஜ் நிடிமொரு இன்று திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது முன்னாள் மனைவி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது முன்னாள் மனைவி ஸ்யாமலி யாரின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், விரக்தியடைந்த மக்கள் பற்றிய ஒரு குறிப்பை வழங்கியுள்ளார். சமந்தா மற்றும் ராஜ் ஜோடியை மறைமுகமாக விமர்சித்தே, இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சாடி வருகின்றனர். அந்த பதிவில், “விரக்தியடைந்த மக்கள் அவநம்பிக்கையான செயல்களைச் செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஷ்யாமலா இந்த வலியை கடந்து செல்ல வேண்டும், விவாகரத்தான பிறகு அடுத்தவர் வாழ்க்கையில் தலையிட வேண்டாமே என பலரும் ஸ்யாமலி டேவை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.





















