Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஷில்டா பணம் பறிக்க தான் இதுபோன்று நடந்துகொள்வதாகவும், தனது கணவரை தன்னிடம் இருந்து பிரித்து தனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வதே அவரது நோக்கம் எனவும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ப்ரியா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஜாய் தனக்கு அனுப்பிய வாட்சப் சாட்களின் ஸ்க்ரீன்சாட்களையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி..
ஜாய் க்ரிஷில்டா மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னதாக ஜாய் க்ரிஷில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாகம் ரங்கராஜ் கூறியிருந்த நிலையில், ஜாய் ரங்கராஜின் வீடியோ ஒன்றை லீக் செய்திருந்தார். இதனையடுத்து தற்போது ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ப்ரியா தனது கணவருக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
அதில் அவர் ஜாய் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், பணம் பறிப்பதும் தனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது தான் அவரது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
[insta]
View this post on Instagram
[/insta]
எனக் குறிப்பிட்டுள்ளார்,
மேலும் முன்னதாக ஜாய் தனக்கு அனுப்பிய வாட்சப் சாட்களின் ஸ்க்ரீன் சாட்களையும் பகிர்ந்துள்ளார். அதில் ஜாய் க்ரிஷில்டா ஸ்ருதிக்கு, நீ ஒரு நாள் தான் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் நான் தினமும் எடுத்துக்கொள்வேன், அவரது நிம்மதி நான் தான் அவர் என்னை தான் காதலிக்கிறார். நீ அவரிடம் இருந்து தள்ளி இரு என்பது போன்ற மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.





















