Manimegalai Priyanka issue | மணிமேகலை மட்டும் ஒழுங்கா? தலைவலியில் விஜய் டிவி! ரக்ஷணின் சோகம்
பிரியங்கா மணிமேகலை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஆங்கரிங் விவகாரத்தில் சிவாங்கி, ரக்ஷனுடன் மணிமேகலைக்கு மோதல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என்றும் பெயரை குறிப்பிடாமல் மணிமேகலை விமர்சித்திருந்தார். குக்காக வந்திருக்கும் ஆங்கர் ஒருவர் என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் குறுக்கிடுகிறார், எனக்கு பணத்தை விட சுய மரியாதை தான் முக்கியம் என்று சொல்லி என்ன நடந்தது என்று விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
ஆனால் மணிமேகலாயால் ஏகப்பட்ட பிரச்னைகள் வந்ததாக சேனல் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிவாங்கி அடுத்தடுத்த சீசன்கள் போகப் போக குக்காக ப்ரோமோட் ஆனார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து விலகிய மணிமேகலை சில நாட்களுக்கு பிறகு ஆங்கராக மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். சிவாங்கியை குக்காக போட்டது போல் என்னையும் ஆங்கராக போட வேண்டும் என மணிமேகலை டிமாண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மணிமேகலை, சிவாங்கிக்கு மோதல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் “என்னைய ஆள விட்ருங்க” என்று சிவாங்கி ஷோவை விட்டு சென்றதாக கூறுகின்றனர். அதனால்தான் ரக்ஷன் மட்டும் தொகுத்து வழங்கி கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு மணிமேகலையையும் சேர்த்து ஆங்கரிங் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
அப்படி இருந்தும் ஆங்கரிங்கின் போது மணிமேகலை, ரக்ஷனுக்கு வாக்குவாதம் வருவது உண்டு என்று சொல்கின்றனர். ஆனால் பிரியங்கா வந்த பிறகு மணிமேகலையின் ஸ்கிரீன் presence-ஐ தட்டி பறித்ததால் கடுப்பாகி ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பிரச்னை கைமீறி போய்விட்டதாக சேனல் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.