”அவன கஷ்டப்படுத்தாதீங்க”ஸ்ரீயை மீட்ட லோகேஷ்..மருத்துவர்கள் சொல்வது என்ன? | Sri Bluetick | Lokesh Kangaraj
நடிகர் ஸ்ரீ போதை பழகத்திற்கு அடிமையாகி உள்ளார்..மன உலைச்சலில் இருக்கிறார்... இவருக்கு சம்பள பணத்தை கூட சரிவர தரவில்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இயக்குநர் லோக்கேஷ் ஸ்ரீயை மீட்டு விட்டதாகவும் அவரை பற்றி வெளியான நேர்காணல்களை நீக்குங்க என்று பரபரப்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் அதிகளவில் பேசப்படுவது நடிகர் ஸ்ரீயைப் பற்றி தான். உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத படி மாறியிருந்த நிலையில், ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தான் அவரைப் பற்றி பேச வைத்தது.
கடைசியாக இறுகப்பற்று என்ற படத்தில் நடித்தார். இந்தநிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அவரது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முடியின் நிறத்தை மாற்றி கொண்டு, பார்க்கவே இது ஸ்ரீயா என்பது போல் பலருக்கும் தோன்றியது. அவர் மன உளைச்சலில் இருப்பதாக சில தகவல்கள் பரவின. அதே போல் அவரது நிதி நிலைமையும், அவரது குடும்பத்தினரின் நிதி நிலையில் சரியில்லை என்றும்... இவருக்கு சம்பள பணத்தை கூட சரிவர தரவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் நடிகர் ஸ்ரீ குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீ இப்போது தீவிர மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். சோஷியல் மீடியாவிலிருந்து விலகி சிகிச்சையில் இருக்கிறார். ஸ்ரீயின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் நேர்காணல்களை நீக்க வேண்டும். சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்த கருத்தும் உண்மை இல்லை. அவரை பற்றி தவறான கருத்துக்கள் அவரது உடல்நிலையை மேலும் பாதிப்படையச் செய்யலாம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.





















