மேலும் அறிய

கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!

இந்த ஆண்டு ஐஐடியில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் எஸ்சி எஸ்டி பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்- முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளால், 2500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 2021- ஆம் ஆண்டு கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப் பள்ளிகளில் இந்த சாதனை சாத்தியமாகி இருப்பதாகவும் முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’கல்வியில் சிறந்த தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம்.

2021- 22இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

2,358 மாணவர்கள் சேர்க்கை

அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர். அதில் 41 பேர் IITகளிலும், 22 பேர் முழு உதவித் தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடியில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்.

உன்னதமான உயரங்களை அடைய வாழ்த்துகள்

பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Embed widget