Oneplus Nord CE 5G | ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் விரைவில் வெளியீடு
ஒன்பிள்ஸ் நோர்ட சி.ஈ 5ஜி ஸ்மார்ட் போன் குறித்த தகவலை அந்த நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போன் அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் வெளியீட்டு தேதி குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் வெளியிட்ட சில தகவல்களை கொண்டு இந்த போன் குறித்த பல அனுமானங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது.
You definitely weren’t expecting 64 million pixels
— OnePlus India (@OnePlus_IN) June 4, 2021
Learn more - https://t.co/UMDC0LqdHk pic.twitter.com/TdkdrTeueN
Oneplus Nord CE 5G
ஒன்பிள்ஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது அதிரடியான Oneplus Nord CE 5G மடலை இந்த மாதம் வெளியிடவுள்ளது. சீன நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Oneplus Nord CE 5G என்ற இந்த மாடல் அந்த நிறுவனத்தால் இம்மாதம் அறிவிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட் போன். இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). அமோல்ட் கொண்ட 6.43இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11, ஆக்சிஜென் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு Qualcomm SM7225 Snapdragon 750G 5G சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 6 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு மடல்களில் வெளியாகவுள்ளது. 64 எம்.பி மெயின் கேமரா மற்றும் இரண்டு கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை 22999 இருக்கலாம் என்ற யுகங்களும் இணையத்தில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Infinix Note 10 Pro | இன்பினிக்ஸ் இன்று ரிலீஸ்; புதிய அதிவேக ஸ்மார்ட் போன் என புகழாரம்!
We’re giving away the #OnePlusNordCE5G before we’ve even launched it. So, enter our giveaway & tag a friend (or five) in the replies to get them involved, too.
— OnePlus India (@OnePlus_IN) June 6, 2021
The more of you that enter, the more likely one of you will win. That’s pure math
Learn more - https://t.co/UMDC0LqdHk pic.twitter.com/NyfhhfkhWV
இந்திய சந்தையில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட் போனக்கின் வெளியீடு மிகவும் அதிகரித்துள்ளது. இன்று infinix நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்பினிக்ஸ் நோட் 10 என்ற இந்த மாடல் அந்த நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று வெளியாகும் இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி கொண்ட 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி85 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மடல்களில் வெளியாகவுள்ளது. 48 எம்.பி மெயின் கேமரா மற்றும் இரண்டு கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.