Google | 3 வருஷம்தான் ஆகுது.. அதற்குள் மூடுவிழா.! இனி தேவையில்லை என இழுத்து மூடும் கூகுள்!
கூகுள் ப்ளஸ் அடுத்த ஆண்டு முடிவுரையை எழுதவுள்ளது.
தங்களது சொந்த சோஷியல் மீடியாவாக பார்க்கப்பட்ட கூகுள் ப்ளஸை நிரந்தரமாக மூட கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
கூகுள்
இன்றைய உலகில் நடக்கும் நிகழ்வுகள் தொடங்கி அனைத்துத் துறைகள் குறித்த அரிய விஷயங்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது கூகுளில் தேடுதல் (Google Search) என்பது தான். அந்தளவிற்கு உலகம் முழுவதும் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. கூகுள் மேப், ட்ரான்ஸ்லேட், ஜிமெயில், யூடியூப், கூகுள் போட்டோஸ் என பல சேவைகளையும் வைத்துள்ளது. இந்நிலையில் கூகுளின் சேவைகளுல் ஒன்றான கூகுள் கரண்ட்ஸ் விரைவில் மூடுவிழா காணவுள்ளது.
View this post on Instagram
Google Currents:
Google Currents, முன்பு G Suiteக்கான கூகுள் ப்ளஸ் என அழைக்கப்பட்டது. இது உள் நிறுவன தொடர்புக்காக Google ஆல் உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். Google Workspace தயாரிப்புகளின் வரிசையில் உள்ள பல தயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக கூகுள் சூட் பயனர்களுக்காகவே இது தொடங்கப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு Google Currents மூடப்படும் என தககவல் வெளியாகியுள்ளது. ஜிமெயிலில் தற்போது சாட் மற்றும் ஸ்பேசஸ் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதில் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுக்கப்படும் என தெரிகிறது. அதனால் இனிமேலும் கூகுள் ப்ளஸ் தேவையில்லை என கூகுள் முடிவெடுத்துள்ளது.
சமீபத்தில் லோகோவை மாற்றிய க்ரோம்..
கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் குரோம், அறிமுகம் செய்த பிறகு 2011 ஆம் ஆண்டில் புதிய லோகா புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு கூகுள் குரோம் லோகா மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்குப்பிறகு 2022 ஆம் ஆண்டு கூகுள் குரோமில் லோகோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய ஐகான்கள் விரைவில் உங்கள் சாதனங்களில் தோன்றும் என கூகுள் குரோம் வடிவமைப்பாளர் எல்வீன் ஹூ டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.