மேலும் அறிய

TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?

TRP Freeze: தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங்கை நிறுத்தி வைத்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

TRP Freeze: ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்.

சேன்லகளுக்கான டிஆர்பி ரேட்டிங்கை நிறுத்திய மத்திய அரசு:

செய்தி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் பாயிண்ட்களை, 4 வாரம் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில்  பரபரப்பை கூட்டும் விதமாக, உறுதிப்படுத்தப்படாத மற்றும் யூகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதால், இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுநலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சொல்வது என்ன?

இதுதொடர்பான அறிக்கையில், செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங் பாயிண்ட் அறிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, பார்க் (BARC) எனப்படும் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதில், “இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில், சில செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை காண்பிப்பதை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கவனித்துள்ளது, இது பொது மக்களிடையே, குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, பொது நலனுக்காக, செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகளை (TRP) வெளியிடுவதை நான்கு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லா கட்டுவதில் சிக்கல்:

தொலைக்காட்சி சேனல்களுக்கான வருவாய் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது. அந்த விளம்பரங்களுக்கான ஒப்பந்தம் என்பது இந்த டிஆர்பி ரேட்டிங் மூலமே கிடைக்கிறது. எங்களுக்கு இத்தனை கோடி பார்வையாளர்கள் உள்ளனர், செய்தி சேனல் சந்தையில் நாங்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க, பார்க் வழங்கும் இந்த டிஆர்பி எனப்படும் ரேட்டிங் புள்ளிகளே சாட்சியமாக உள்ளன. தற்போது அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு நிறுத்தி வைத்து இருப்பது முன்னணி செய்தி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சில நலிவுற்ற செய்தி சேனல்கள் தங்களுக்கு சாதகமான சூழலாக இதனை கருதுகின்றன.

தேர்தல் நேரமாச்சே..!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கள் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அராசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள் சூடுபிடிக்க தொடங்கும். 10நொடி விளம்பரங்களுக்கு எவ்வளவு கட்டணம் வரை வழங்கலாம் என்பதை இந்த ரேட்டிங் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் இறுதி செய்வார்கள். தற்போது அந்த ரேட்டிங்கிற்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

உஷார்! இனி UPI-யில் பணம் அனுப்பினால் உடனடியாகப் போய் சேராது - ஏன் தெரியுமா?
உஷார்! இனி UPI-யில் பணம் அனுப்பினால் உடனடியாகப் போய் சேராது - ஏன் தெரியுமா?
iPhone 18 Leaks: ஐபோன் பிரியர்களுக்கு நற்செய்தி.! 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸில் மிகப்பெரிய மாற்றங்கள்; கசிந்த படங்கள்
ஐபோன் பிரியர்களுக்கு நற்செய்தி.! 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸில் மிகப்பெரிய மாற்றங்கள்; கசிந்த படங்கள்
iPhone 17 Huge Offer: இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
ரீசார்ஜ் டென்ஷன் இனி வேண்டாம்! Jio, Airtel, Vi-யின் ஆண்டு திட்டங்கள்: பணம் மிச்சம் & சிறந்த சலுகைகள்!
ரீசார்ஜ் டென்ஷன் இனி வேண்டாம்! Jio, Airtel, Vi-யின் ஆண்டு திட்டங்கள்: பணம் மிச்சம் & சிறந்த சலுகைகள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
China Warns America: “எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
“எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Embed widget