விம்பிள்டன் வெள்ளை ஆடைக் கட்டுப்பாட்டைத் தகர்த்த வீரர்.. பின்பற்றப்படும் மரபின் பின்னணி என்ன?
டென்னிஸ் உலகின் பழமையானதும் மதிப்புமிக்கதுமான இந்த நிகழ்வில் பிற விம்பிள்டன் போட்டிகளில் இல்லாத தனித்துவமான ஓர் விதி உள்ளது. அதுதான் வெள்ளை நிற ஆடைக் குறியீடு.
உலகின் மிகப்பெரும் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றாக விளங்கும் விம்பிள்டன் சீசன் கடந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாரம்பரிய வெள்ளை நிற விதி
இந்த விம்பிள்டன் போட்டிகளில் அதன் பாரம்பரிய விதியான வெள்ளை நிற ஆடை அணிந்து விளையாடும் விதியை ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ் முன்னதாகத் தகர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஆண்டு போட்டிகளில் சிவப்பு நிற தொப்பி, ஷூ அணிந்து விளையாடிய அவர், அதுவே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனித்துவ விதி
இந்நிலையில், இந்த வெள்ளை ஆடை குறியீடு தோன்றிய வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம். டென்னிஸ் விளையாட்டின் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டிகள் 1877ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
டென்னிஸ் உலகின் பழமையானதும் மதிப்புமிக்கதுமான இந்த நிகழ்வில் பிற விம்பிள்டன் போட்டிகளில் இல்லாத தனித்துவமான ஓர் விதி உள்ளது. அதுதான் வெள்ளை நிற ஆடைக் குறியீடு.
விம்பிள்டன் வீரர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, போட்டியாளர்கள் டென்னிஸ் கோர்ட்டுக்குள் நுழையும் தருணம் தொடங்கி முழுவதுமாக வெள்ளை ஆடை மட்டுமே அணிய வேண்டும், வேறு வண்ணங்கள் ஏதும் இருக்கக் கூடாது.
வரலாற்றுப் பின்னணி
விக்டோரிய மகாராணி காலத்தில் இந்த விதிகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், டென்னிஸ் விளையாடும்போது உடலில் தோன்றும் எக்கச்சக்க வியர்வை வெள்ளை நிற உடையில் குறைவாகத் தெரியும் என நம்பப்பட்டு, தகுதிக்காக வீரர்கள் வெள்ளை உடை அணியத் தொடங்கியதாகவும் தரவுகள் கூறுகின்றன.
தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் விம்பிள்டன் ஆடைக் குறியீடு தொடர்பான விதிகள் இறுக்கமாகப் பின்பற்றப்படத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வெள்ளை நிற குடும்பத்தைச் சேர்ந்த ஆஃப் ஒயிட், க்ரீம், லோகோக்களில் உள்ள வண்ணங்கள் என எதுவுமே அனுமதிக்கப்படுவதில்லை.
விதியைத் தகர்த்த வீரர்
ஆடைகள் தாண்டி தொப்பிகள், தலைக்கவசங்கள், காலுறைகள் போன்றவையும் ஒரு சென்டிமீட்டர் அளவு விலக்கு தவிர்த்து இந்த வெள்ளை விதியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.
எனினும் இந்த விதிகள் தளர்த்தப்பட்ட சம்பவங்களும் விம்பிள்டன் வரலாற்றில் உள்ளன.
இந்நிலையில் 27 வயது கிர்கியோஸிடம் இந்த விதி மீறல் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது தான் எப்போதும் கருப்பு உடை அணியவே விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்