Kohli on World Test Championship: இங்கிலாந்தில் வெல்வது மட்டுமே இறுதி எல்லையில்லை - விராட் கோலி
"பயிற்சிக்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே இருப்பது குறித்து கவலையில்லை, எல்லாம் நம் மனநிலையில் தான் உள்ளது" - விராட் கோலி!
டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் இருந்து நள்ளிரவு இங்கிலாந்து புறப்பட்டது.
Off we go ✈️#TeamIndia pic.twitter.com/4k7wOOVpdA
— BCCI (@BCCI) June 2, 2021
இங்கிலாந்து செல்லும் முன் செய்தியாளர்கள் சந்தித்த விராட் கோலி, "முதல் முறையாக சவால் நிறைந்த டெஸ்ட் வகையிலான போட்டியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப், அதன் இறுதி போட்டியில் விளையாடுவதை மிக பெரிதாக எண்ணுகிறோம். ஒரு அணியாக நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறோம்" என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
🗣️ Happy to have the opportunity to play the World Test Championship Final: #TeamIndia Captain @imVkohli ☺️ pic.twitter.com/jjFEwEisrD
— BCCI (@BCCI) June 2, 2021
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக எப்போதுமே பார்க்கப்படும் இடம் இங்கிலாந்து. அப்படிப்பட்ட இங்கிலாந்து ஆடுகளத்தில் நியூசிலாந்து அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 18-ஆம் தேதி எதிர்கொள்ளகிறது இந்திய அணி. நமக்கு முன்பே இங்கிலாந்து சென்றடைந்த நியூசிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டு தயார் நிலையில் இந்தியாவை எதிர்கொள்கிறது. அதேநேரம் இந்திய அணியோ பயிற்சி ஆட்டத்தில் கூட பங்கேற்காமல் நேரடியாக இறுதி போட்டியில் களமிறங்குகிறது. இது மிகப்பெரிய பின்னடைவாக இந்திய அணிக்கு கருதப்படும் நிலையில், இது குறித்து விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எந்த பயிற்சியுமின்றி நேரடியாக இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்திய அணி குறித்து பதிலளித்த விராட் "அது எல்லாம் உங்கள் மனநிலையில்தான் உள்ளது, ஒரு சூழலை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதை சார்ந்தது. எங்கள் அனைவருக்குமே இங்கிலாந்தில் நிலவும் சூழல் தெரியும், சரியான யோசனையுடன் களத்திற்கு செல்லவில்லை என்றால், முன்கூட்டியே அங்கு ஆடி இருந்தாலும் தடுமாற்றத்தையே சந்திக்க நேரிடும். மனதளவில் தயாராவதே முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
தோனிக்கு எழுந்துள்ள புதிய தலைவலி - சென்னை அணிக்கு பின்னடைவா?
”பயிற்சிக்கு தேவையான கால அவகாசமில்லை என்ற கவலை எங்களுக்கு இல்லை, ஒரு அணியாக எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் தெளிவாக உள்ளோம். அனைவரும் இணைந்து மகிழ்ச்சியான சூழலில் விளையாடுவதே முக்கியம், இங்கிலாந்தில் வெல்வது மட்டுமே இறுதி எல்லை இல்லை என நினைக்கிறேன். தேவையற்ற கூடுதல் அழுத்தமின்றி போட்டியில் பங்கேற்க உள்ளோம் என தெரிவித்துவிட்டு விராட் கோஹ்லி & அணி இங்கிலாந்து புறப்பட்டுள்ளது. அவர்களுடன் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து சென்றுள்ளனர்.