பஞ்சாப் மானத்தை காப்பாற்றிய தமிழன் ஷாரூக்: திணறி 100-ஐ கடந்தது பஞ்சாப்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் ஷாரூக்கானின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 106 ரன்களை எடுத்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் நேருக்கு நேர் மோதின. ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனிக்கு ஐ.பி.எல்.லில் இது 200வது போட்டி என்பதால் அவரது ரசிகர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தோனியின் முடிவு ஒருபோதும் தவறாகாது என்பது போலவே, பஞ்சாப் அணியின் பேட்டிங்கும் அமைந்தது. கடந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய அந்த அணி கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர்.பஞ்சாப் மானத்தை காப்பாற்றிய தமிழன் ஷாரூக்: திணறி 100-ஐ கடந்தது பஞ்சாப்

ஆனால், 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கே.எல்.ராகுலை ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்தார். மயங்க் அகர்வாலை 0 ரன்னிலும், அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலை 10 ரன்னிலும், கடந்த ஆட்டத்தில் காட்டடி அடித்த தீபக் ஹூடாவை 10 ரன்னிலும், அதிரடி மன்னன் பூரனை 0 ரன்னிலும் தீபக் சாஹர் வெளியேற்றினார். இதனால், பஞ்சாப் அணி 7 ஓவர்களில் வெறும் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பஞ்சாப் அணியின் விளையாட்டை பார்த்தபோது 50 ரன்களையாவது கடக்குமா? என்ற பரிதாபமாக இருந்நதது. அப்போது,பஞ்சாபின் மானத்தை காப்பாற்றுவதற்காக தமிழக வீரர் ஷாரூக்கான் களமிறங்கினார். இறங்கியது முதல் அதிரடியை கையில் எடுத்த ஷாரூக்கான் பவுண்டரி, சிக்ஸர் என்று விளாசினார்.பஞ்சாப் மானத்தை காப்பாற்றிய தமிழன் ஷாரூக்: திணறி 100-ஐ கடந்தது பஞ்சாப்

அவருடன் இணைந்து விளையாடிய ரிச்சர்ட்ஸன் 22 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் இறங்கிய முருகன் அஸ்வின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தனியாளாக போராடிய ஷாரூக்கான் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 47 ரன்களை குவித்து 8வது விக்கெட்டாக வெளியேறினார்.  இறுதியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை குவித்தது.

ஒரு கட்டத்தில் 50 ரன்களை தொடுமா என்று காத்திருந்த பஞ்சாபின் மானத்தை தமிழன் ஷாரூக்கான் தனது அதிரடியால் சத ரன்களை எடுக்கவைத்து காப்பாற்றினார்.சென்னை அணியில் தீபக் சாஹர் 4 ஓவர்கள் பந்துவீசி 4 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பாப்டுப்ளிஸ்சிஸ் மற்றும் மொயின் அலியை பேட்டிங் செய்து வருகின்றனர்.  

Tags: IPL chennai Tamilnadu punjab sharuk khan

தொடர்புடைய செய்திகள்

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

‛தோனியும்... பி.டி.உஷாவும் ஓடிய ரயில்வே மைதானத்தை விற்காதே’ வெங்கடேசன் எம்.பி., எதிர்ப்பு!

‛தோனியும்... பி.டி.உஷாவும் ஓடிய ரயில்வே மைதானத்தை விற்காதே’ வெங்கடேசன் எம்.பி., எதிர்ப்பு!

PAK vs ENG Broadcast: மன வேதனையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - மேட்ச் நடக்கும்.. ஆனா பார்க்க முடியாது!

PAK vs ENG Broadcast: மன வேதனையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - மேட்ச் நடக்கும்.. ஆனா பார்க்க முடியாது!

Anrich Nortje on MS Dhoni: தோனிக்கு பேட்டிங் தெரியாதுன்னு நினைச்சேன் - அன்ரிச் நோர்க்யா!

Anrich Nortje on MS Dhoni: தோனிக்கு பேட்டிங் தெரியாதுன்னு நினைச்சேன் - அன்ரிச் நோர்க்யா!

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூபாய் 30 லட்சம் மிச்சம் - தமிழக அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூபாய் 30 லட்சம் மிச்சம் - தமிழக அரசு

கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !

கிராம வளர்ச்சி  திட்டம் தயாரித்த  மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !

’என் வருமானம் முழுதும் மக்கள் பணிக்கே’ -ஆச்சரிய மருத்துவர் மகேஸ்வரன்

’என் வருமானம் முழுதும் மக்கள் பணிக்கே’ -ஆச்சரிய மருத்துவர் மகேஸ்வரன்

‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்!

‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்!