Suryakumar Yadav: டி20 போட்டிகள்... நம்பர் 1 இடத்தை பிடித்த சூர்ய குமார் யாதவ்!
டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீரராக இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டி20 போட்டிகள்:
இந்த ஆண்டி நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. இச்சூழலில், வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்றின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் அதன்பின்னர் நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை.
மேலும், அவர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் டி20 தொடரிலும் விளையாடவில்லை. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுத்து வருகிறார். இதனிடையே தான் இந்திய அணியின் டி 20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தான் டி20 போட்டிகளின் சிறந்த பேட்ஸ்மன்கள் பட்டியலை ஐசிசி இன்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்:
தரவரிசைப் படி இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 863 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அதன்படி, இந்திய அணிக்காக இதுவரை மொத்தம் 53 டி20 போட்டிகளில் 50 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள இவர் 46.02 என்ற சராசரியுடன் 1841 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
அதேபோல், பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் 787 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் 756 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும்,734 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் நான்காவது இடத்திலும் உள்ளனர். மேலும், ஐந்தாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் 702 புள்ளிகளுடன் இருக்கிறார்.
அதேபோல், டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஹசரங்காவும் , மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர் ஆதில் ரஷித்தும் இருக்கின்றனர்.
அதேபோல், நான்காவது இடத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் தீக்சனாவும், ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட்டும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 இந்திய கிரிக்கெட் அணி நாளை கேரளாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli: கோப்பை தான் மிஸ்ஸிங்! சாதனை எல்லாம் நம்ம பக்கம் தான்! கிங் கோலியின் மிரட்டலான சாதனை!
மேலும் படிக்க: Virat Kohli: 3 சதம், 6 அரை சதங்கள்... சச்சின் சாதனையை முறியடித்த ‘கிங்’ கோலி.. தொடர் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்!