மேலும் அறிய

Shikhar Dhawan: என் தேச மக்களுக்கு நன்றியுடன் உதவி செய்கிறேன்: ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஷிகர் தவான் நெகிழ்ச்சி

"பெருந்தொற்று காலத்தில் என் தேச மக்களுக்கு நன்றியுடன் சேவை செய்கிறேன். இது சிறிய உதவி. எப்போதும் என் மக்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். இந்தியா இப்பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்து நிச்சயமாக ஒளிரும்" என ட்வீட் செய்திருக்கிறார்.

குருகிராம் காவல்துறைக்கு தனது சொந்த செலவில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி அளித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.
அவரது இந்த ஈகை, நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில் தனது நற்செயலை தேசத்துக்கு ஆற்றும் நன்றிக்கடன் எனக் குறிப்பிட்டு விண்ணைத் தொட்டு நிற்கிறார் ஷிகர் தவான்.
இயற்கைப் பேரிடரோ அல்லது இப்போது ஏற்பட்டிருக்கும் மருத்துவப் பேரிடரோ மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்து இந்த பூமி இவர்களைப் போல் உள்ளோர் இருக்கும் வரை உய்க்கும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிவிடுகிறது.
 

Shikhar Dhawan: என் தேச மக்களுக்கு நன்றியுடன் உதவி செய்கிறேன்: ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஷிகர் தவான் நெகிழ்ச்சி
அத்தகைய நல் உள்ளங்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். தான் நீட்டிய உதவிக்கரம் குறித்து சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கு அவர் அழகான, அழுத்தமான விளக்கம் நல்கியிருக்கிறார். இது நிச்சயமாக இன்னும் பல இளைஞர்களை, நல் உள்ளம் கொண்டோரை ஊக்குவித்து நெருக்கடியான காலகட்டத்தில் தேசத்துக்கு தோள் கொடுக்க உதவி செய்யும்.
முதலில் குருகிராம் போலீஸார்தான் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ஷிகர் தவானின் உதவியைப் பற்றி வெளியிட்டிருந்தனர். அந்த ட்வீட்டரி தி இந்தியா இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ரீட்வீட் செய்தது.
 
இந்நிலையில், தனது உதவி குறித்து ஷிகர் தவான், "பெருந்தொற்று காலத்தில் என் தேச மக்களுக்கு நன்றியுடன் சேவை செய்கிறேன். இது சிறிய உதவி. எப்போதும் என் மக்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். இந்தியா இப்பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்து நிச்சயமாக ஒளிரும்" என ட்வீட் செய்திருக்கிறார்.
களத்தில் சிங்கம் போல் கர்ஜிக்கும் ஓர் இளம் வீரரின் இந்த நம்பிக்கை வார்த்தைகள் கரோனாவை எதிர்த்துப் போராடுபவர்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
 
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Grateful to serve my people in this pandemic through this small token of help! Always ready to help my people and society to my best. India shall rise and shine against this pandemic! <a href="https://t.co/bHlq0eJvUv" rel='nofollow'>https://t.co/bHlq0eJvUv</a></p>&mdash; Shikhar Dhawan (@SDhawan25) <a href="https://twitter.com/SDhawan25/status/1393237105279635456?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 14, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 
ஷிகர் தவான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சார்ந்த அணி இதுவரை நடந்த போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகள் என நல்ல நிலையில் இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அடுத்த படியாக சிஎஸ்கே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. நடப்பு ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் 380 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பெறுவதற்கான தகுதியுடோர் பட்டியலில் இடம்பெற்றிந்தார்.
 

Shikhar Dhawan: என் தேச மக்களுக்கு நன்றியுடன் உதவி செய்கிறேன்: ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஷிகர் தவான் நெகிழ்ச்சி
ஆனால், ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரானது கடந்த வாரம் காலவரையின்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை உடனடியாக பிசிசிஐ மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் அவர்களது தாயகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...
ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...
கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...
கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...
Bhuvneshwar Kumar: சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20
சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20
IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget