Pickleball Team: சென்னை அணியை வாங்கிய சமந்தா! அவரே சொன்ன காரணம்
World Pickleball League தொடரின் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார் நடிகை சமந்தார்.
PickleBall Team:
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த காலங்களில், மையோசிடிஸ் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதற்காக படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் சமந்தா, பழையபடி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், World Pickleball League தொடரின் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார்.
இதுகுறித்து நடிகை சமந்தா, ”என் சிறுவயது முதல் இருந்தே PickleBall விளையாட்டு மிகவும் பிடிக்கும். சென்னை அணியின் உரிமையாளராக நான் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபகாலமாக விளையாட்டுகளில் பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதுமே இந்தியாவின் வளர்ந்துவரும் விளையாட்டு சூழலின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். எனவே, இளம்பெண்கள் பலரையும் விளையாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்"என்று பேசியுள்ளார்.
View this post on Instagram
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,"விளையாட்டின் தேவை, இயக்கத்தின் தேவை மற்றும் அனைவரும் விளையாடலாம் மற்றும் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கையை உணர்ந்து வளர்ந்துள்ளேன். Pickleball அணியைத் தேர்ந்தெடுப்பது இல்லை. இது ஒரு முடிவு. சிறுமிகளுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் அவளால் முடியாது என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு சிறுமிக்கும் அர்ப்பணிப்பு.
View this post on Instagram
ஆரோக்கியமான, உடற்தகுதி மற்றும் மகிழ்ச்சியான இந்தியாவிற்கு இயக்கம் அவசியம் - அது விளையாட்டின் சக்தியை நம்புவதிலிருந்து தொடங்குகிறது."என்று பதிவிட்டுள்ளார். ஜனவரி 2025-ல் நடைபெற உள்ள இந்தத் தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய ஏழு நகரங்களை இலக்காகக் கொண்டு ஆறு அணிகள் இறுதி செய்யப்பட உள்ளன. ஊறுகாய் பந்து என்று அழைக்கப்படும் (Pickleball) இந்த விளையாட்டு டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் ஒரு கலவை என்பது குறிப்பிடத்தக்கது.