Rahul Dravid: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரானார் ராகுல் டிராவிட்! பிசிசிஐ அறிவிப்பு!
பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இதை அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் புதிய தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்தது. கடைசி நாளில் அப்ளை செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை, புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது.
🚨 NEWS 🚨: Mr Rahul Dravid appointed as Head Coach - Team India (Senior Men)
— BCCI (@BCCI) November 3, 2021
More Details 🔽
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருபவர் ரவிசாஸ்திரி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி தற்போது வரை சிறப்பாகவே ஆடி வருகிறது. அவரது பயிற்சியாளர் ஒப்பந்தம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழு அளித்த அறிவுரையின்படி, அவரது பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் இந்தாண்டின் இறுதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல்டிராவிட்டே நியமிக்கப்படுவார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் தான அவர் தற்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் பயிற்சி பெற்ற சுப்மான் கில், பிரித்விஷா உள்ளிட்ட பல வீரர்களும் தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணிக்கும் ராகுல் டிராவிட்டே பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவரது தலைமையில் இந்திய அணி 2007ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...
‛தமிழில் பேசுடா...’ இந்தியில் இல்லாமல் போனது ஏன்? வர்த்தக சமரசம் செய்ததா ஜெய்பீம்?https://t.co/8bsnIK1BL8#JaiBhim #PrakashRaj #JaiBhimOnPrime
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jaibhim Rajakannu Manikandan | "என் அம்மா, படம் பாத்துட்டு ரெண்டு நாளா தூங்கல.." ஜெய்பீம் ’ராஜாகண்ணு’ மணிகண்டன்..#Jaibhim #Manikandan #Rajakannuhttps://t.co/jUnerYTJfN
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jai Bhim Tamizh Interview : ‛என் மனைவியே என்னைப் பார்த்து பயப்படுறா...’ ஜெய்பீம் ‛டெரர் எஸ்ஐ’ தமிழ் பேட்டி..!#Jaibhim #Tamizh #Guruhttps://t.co/fyjMAKUjIf
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்