ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் அணி 221 ரன்களை குவித்தது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா அதிரடியால் பஞ்சாப் அணி 221 ரன்களை குவித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் மூன்றாவது ஆட்டம் மும்பை, வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து, ஆட்டத்தை கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர். மயங்க் அகர்வால் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயிலும், கே.எல்.ராகுலும் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். கிறிஸ் கெயில் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களில் ரியான் பராக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் அணி 221 ரன்களை குவித்தது

இதையடுத்து, களமிறங்கிய தீபக் ஹூடாவும், கே.எல்.ராகுலுடன் இணைந்து அணியின் ரன் ரேட் குறையாத வகையில் பார்த்துக்கொண்டார். இறங்கியது முதல் ருத்ரதாண்டவம் ஆடிய தீபக் ஹூடா சிக்ஸர்கையும், பவுண்டரிகளையும் மைதானத்தின் அனைத்து பக்கமும் பறக்கவிட்டார்.  ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் அணி 221 ரன்களை குவித்தது

அவர் வெறும் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், பூரன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற கே.எல்.ராகுலின் ஆட்டத்தில் அனல் பறந்தது. கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 91 ரன்களுடன் 5வது விக்கெட்டாக வெளியேறினார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

Tags: IPL rajasthan punjab kl rahul deepk hooda

தொடர்புடைய செய்திகள்

PAK vs ENG Broadcast: மன வேதனையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - மேட்ச் நடக்கும்.. ஆனா பார்க்க முடியாது!

PAK vs ENG Broadcast: மன வேதனையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - மேட்ச் நடக்கும்.. ஆனா பார்க்க முடியாது!

Anrich Nortje on MS Dhoni: தோனிக்கு பேட்டிங் தெரியாதுன்னு நினைச்சேன் - அன்ரிச் நோர்க்யா!

Anrich Nortje on MS Dhoni: தோனிக்கு பேட்டிங் தெரியாதுன்னு நினைச்சேன் - அன்ரிச் நோர்க்யா!

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!

WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நடுவர்கள் அறிவிப்பு!

‛மனசு வலிக்கரது...’ அம்பி வசனத்தை பதிலடியாக கொடுத்த அஸ்வின்!

‛மனசு வலிக்கரது...’ அம்பி வசனத்தை பதிலடியாக கொடுத்த அஸ்வின்!

IPL 2021 Update: செப்டம்பர் 19 தொடங்குகிறதா ஐ.பி.எல்? அக்டோபர் 15-இல் எண்டு கார்டா?

IPL 2021 Update: செப்டம்பர் 19 தொடங்குகிறதா ஐ.பி.எல்? அக்டோபர் 15-இல் எண்டு கார்டா?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!