Pro Kabaddi 2023: அதிக வெற்றிகளில் யு மும்பா ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா தமிழ் தலைவாஸ்..? இன்று யாருக்கு வெற்றி?
Tamil Thalaivas vs U Mumba : கடந்த டிசம்பர் 15 தேதி அன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யு மும்பா, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது.
புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு ஸ்டேடியத்தில் டிசம்பர் 17ம் தேதி (இன்று) நடைபெறும் புரோ கபடி லீக் சீசன் 10 இன் 28வது போட்டியில் யு மும்பா அணி, தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 09:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
யு மும்பா - தமிழ் தலைவாஸ் கடந்த போட்டிகளில் எப்படி..?
கடந்த டிசம்பர் 15 தேதி அன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யு மும்பா, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. முந்தைய போட்டியில் யு மும்பா அணி பாட்னா பைரேட்ஸ் அணியை 42-40 என்ற கணக்கில் வீழ்த்தியது, மேலும் இது புரோ கபடி லீக் சீசன் 10 இல் யு மும்பா அணியின் இரண்டாவது வெற்றியாகும்.
இதற்கிடையில், டிசம்பர் 13 அன்று தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் 38-36 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் சாதனை
பிகேஎல் வரலாற்றில் யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் 9 முறை மோதியுள்ளன. அதில், தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான 6 வெற்றிகளுடன் யு மும்பா அணி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் 2 முறை மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
கடைசியாக நடந்த யு மும்பா, தமிழ் தலைவாஸ் ஆட்டத்தில் சீசன் 9 இல் 34-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று யு மும்பா அணி முதலிடம் பிடித்தது.
4 போட்டிகளுக்குப் பிறகு, பிகேஎல் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் யு மும்பா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றியும், 2 தோல்வியும் அடைந்து 11 புள்ளிகளை குவித்துள்ளது. தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை பிகேஎல் வரலாற்றில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
யு மும்பா vs தமிழ் தலைவாஸ் அணிகளில் சிறந்த வீரர்கள்:
யு மும்பா:
4 போட்டிகளில் 27 ரெய்டு புள்ளிகளை குவித்த குமன் சிங் இந்த சீசனில் யு மும்பாவின் முதன்மை ரைடர்களில் ஒருவராக திகழ்கிறார். குமன் சிங் கடந்த போட்டிக்யில் 8 ரெய்டு புள்ளிகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிகேஎல் 10 இன் 4 போட்டிகளில் 9 டிபெண்ட் புள்ளிகளைப் பெற்று யு மும்பா வீரர் சுரிந்தர் முன்னணி வீரராக திகழ்கிறார். ஆல்ரவுண்டராக அமீர்முகமது ஜஃபர்தனேஷ் இதுவரை 38 புள்ளிகளுடன் அணியில் முதலிடத்தில் உள்ளார்.
தமிழ் தலைவாஸ்
பிகேஎல் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி ரெய்டராக அஜிங்க்யா பவார் திகழ்கிறார். இவர் கடந்த 3 போட்டிகளில் 4 டூ ஆர் டை ரெய்டு புள்ளிகள் உட்பட 30 ரெய்டு புள்ளிகளை எடுத்துள்ளார்.
சாஹில் குலியா தமிழ் தலைவாஸ் அணிக்காக டிபெண்ட் பிரிவில் முன்னிலை வகிக்கிறார். இவர் கடந்த 3 போட்டிகளில் 12 தடுப்பாட்ட புள்ளிகளை எடுத்துள்ளார்.
பிகேஎல் புள்ளிவிவரங்கள், மைல்கற்கள்:
தமிழ் தலைவாஸின் சாஹில் குலியாவுக்கு பிகேஎல்லில் 100 டேக்கிள் புள்ளிகளை எட்ட இன்னும் 1 டேக்கிள் பாயின்ட் மட்டுமே தேவைப்படுகிறது.
ப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?
ப்ரோ கபடி சீசன் 10 -ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், Disney+Hotstar ஆப்பில் இலவசமாக கண்டு களிக்கலாம்.