Tokyo olympic: இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதிசெய்த ரவிக்குமார் தாஹியா, யார் தெரியுமா?
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா பங்கேற்கிறார். இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரர் உகுயேவை எதிர்த்து விளையாட உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் ஆடவர் 57 கிலோ பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் ரவுண்டின் முடிவில் ரவிக்குமார் தாஹியா 2-1 என இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ரவுண்டில் கஜகிஸ்தான் வீரர் சுதாரித்து கொண்டு வேகமாக 8 புள்ளிகளை எடுத்தார். இறுதியில் கஜகிஸ்தான் வீரரை பின் ஃபால் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா பங்கேற்கிறார். இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரர் உகுயேவை எதிர்த்து விளையாட உள்ளார்.
2008ஆம் ஆண்டு சுஷில் குமார் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். அதன்பின்னர் தற்போது இரண்டாவது இந்திய வீரராக ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு ரவிக்குமார் தகுதிப் பெற்றுள்ளார். இந்நிலையில் யார் இந்த ரவிக்குமார் தஹியா எப்படி மல்யுத்தப் போட்டிக்குள் வந்தார்?
ஹரியானா மாநிலம் சோனிபத் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் புனியா. இவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை விவயசாயம் செய்து வருகிறார். 2008ஆம் ஆண்டு சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வெல்வதை பார்த்து மல்யுத்த விளையாட்டிற்குள் ரவிக்குமார் தாஹியா வந்தார். தன்னுடைய 10ஆவது வயதில் ரவிக்குமார் மல்யுத்த பயிற்சியை மேற்கொண்டார். இவர் இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்களின் ஒருவரான சத்பால் சிங்கிடம் பயிற்சி பெற்றார்.
2015ஆம் ஆண்டு ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பிரபலம் அடைய தொடங்கினார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவு மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.
RAVI KUMAR PINS HIS OPPONENT DOWN! 😱🤩
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
With this move, #IND's 57kg representative in #wrestling made it to the gold-medal match!#StrongerTogether | #UnitedByEmotion | #Tokyo2020 | #Olympics pic.twitter.com/OuM1EWUGeZ
இதனைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று உள்ள இவர் தன்னுடைய ரோல்மாடலை போல் முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியுள்ளார். அவரைப் போல் வெள்ளிப்பதக்கம் வெல்லாமல் இவர் தங்கப்பத்தை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான் ரஷ்யாவைச் சேர்ந்த உகுயேவை எதிர்த்து விளையாடுகிறார். இந்தப் போட்டி சற்று கடினமான ஒன்று என்றாலும் அதில் ரவிக்குமார் வெற்றிப் பெற்று இந்தியாவிற்கு மல்யுத்தத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று தருவார் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் மல்யுத்தம் : அரையிறுதில் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி: வெண்கல பதக்கத்திற்கு வாய்ப்பு உண்டு..!