Zaheer Khan - LSG : லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்..!: இனி வேறமாறிதான்..!
LSG Mentor Zaheer Khan: ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
![Zaheer Khan - LSG : லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்..!: இனி வேறமாறிதான்..! Zaheer Khan has joined LSG as their mentor filling the vacancy left by Gautam Gambhir Zaheer Khan - LSG : லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்..!: இனி வேறமாறிதான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/28/adefe6a4562267e899c1a9d7372ea0751724843787023572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Lucknow Super Giants Mentor Zaheer Khan: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், லக்னோ அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளது, அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஐபிஎல் சீசன் 18 வது தொடரானது, அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. தற்போது, சீசன் 18ல் பல்வேறு மாற்றங்கள் நடைபெறலாம் என்ற நிலைதான் உள்ளது. அந்த வகையில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரோஹித் ஷர்மா ஆகியோர் அவர்கள் விளையாடிய அணிகளிலேயே தக்கவைக்கப்படுவார்களா அல்லது அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜாகீர் கான்:
தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியின் வீரர்கள் மட்டுமின்றி, பயிற்சியாளர்களையும் மாற்றும் முனைப்பில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்கள் பணிகளை செய்து வருகிறது. அதன்படி பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் முதல் அணியாக தங்களது ஆலோசகராக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை, அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Zaheer, Lucknow ke dil mein aap bohot pehle se ho 🇮🇳💙 pic.twitter.com/S5S3YHUSX0
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024
மேற்கொண்டு அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மோர்க்கல் தற்சமயம், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்த அறிவிப்பையும் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தற்போதைய பயிற்சியாளர்கள் இடத்தில் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கரும், துணை பயிற்சியாளர்களாக ஆடம் வோஜஸ், லான்ஸ் க்ளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ், ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் பிரவின் டாம்பே ஆகியோர் உள்ளனர்.
Also Read; IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)