மேலும் அறிய

RR Vs GT, IPL 2024: ராஜஸ்தானின் 5வது வெற்றியை தடுத்து நிறுத்துமா குஜராத்? ஜெய்பூரில் இன்று பலப்பரீட்சை..!

RR Vs GT, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோத உள்ளன.

RR Vs GT, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று சஞ்சு சாம்சன் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

ராஜஸ்தான் - குஜராத் மோதல்:

ராஜஸ்தான்  மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. எனவே இன்றைய போட்டியிலும் வெற்றி பெற முனைப்பு காட்டுகிறது.

அதேநேரம், குஜராத் அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் இரண்டில்  வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றது. இதனால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுகிறது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால், பட்லர், ஹெட்மயர் மற்றும் ரியான் பராக் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், சாஹல் மற்றும் அஷ்வின் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி தருகின்றனர். மறுபுறம் குஜராத் அணியோ பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை நிலையாக வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. கில் மற்றும் மில்லர் உடன் சேர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களும் பங்களிக்க வேண்டியது அவசியம். பந்துவீச்சில் முகமது ஷமியின் இடத்தை நிரப்ப முடியாதது குஜராத் அணியின் பெரும் பலவீனமாக உள்ளது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி 4 முறையும், ராஜஸ்தான் அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 192 ரன்களையும், குறைந்தபட்சமாக 177 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 188 ரன்களையும், குறைந்தபட்சமாக 118 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

மைதானம் எப்படி?

ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்ல முடிவாக இருக்கும். 

உத்தேச அணி விவரங்கள்:

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்

குஜராத்: சுப்மன் கில், ஷரத், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோஹித் சர்மா

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget