IPL | “சார்... தோனி சார்.. சிஎஸ்கே சார்.! குஷியில் தூபேவின் மனைவி! இஸ்டாவில் மகிழ்ச்சி பதிவு!
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் மேலும் 21 பேரை வாங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மொத்தம் 25 வீரர்களுடன் அணியை கட்டமைத்திருக்கிறது
2022 ஐபிஎல் தொடருக்கு முன்னால், வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ஏற்கெனவே தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு பேரை தக்க வைத்தது. அதனை அடுத்து, மேலும் 21 பேரை வாங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மொத்தம் 25 வீரர்களுடன் அணியை கட்டமைத்திருக்கிறது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான சிவம் தூபேவை 4 கோடி ரூபாய்க்கு எடுத்தது சென்னை அணி. 50 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயித்து கொண்டு களத்தில் இறங்கிய தூபேவை, சென்னை அணியும், லக்னோ, பஞ்சாப் அணிகளும் வாங்க போட்டியிட்டனர். இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூபேவை வாங்கியது.
All round aatam begins 🔜! #SuperAuction #WhistlePodu 🦁 @IamShivamDube pic.twitter.com/PB9x0awmWe
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) February 13, 2022
2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்காக விளையாடிய தூபே, 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட இருக்கும் அவர், ”ஹலோ சென்னை. சிஎஸ்கே போன்ற பெரிய அணிக்காக விளையாட இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். தோனி தலைமையின் கீழ் விளையாட வேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. அனைவருக்கும் நன்றி. விசில் போடு” என தெரிவித்திருந்தார்.
அதனை அடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் சிவம் தூபேவின் மனைவி அஞ்சும் சென், “இறுதியாக தோனியின் அணியில்” என கேப்ஷன் போட்டு ஸ்டோரி பகிர்ந்திருக்கிறார். தோனியின் அணியில் விளையாட இருப்பதால் தூபேவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஸ்டோரி இப்போது வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:
#Yellove morning to all.! #PrideOf2022 #WhistlePodu 💛🦁 pic.twitter.com/d4Z0tyR7sW
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) February 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்