KKR vs RR: எங்க அம்மா மணமகன் பார்க்க சொன்னாங்க... ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வந்த கோரிக்கை !
KKR vs RR, IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
15ஆவது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் களத்தில் ரசிகை ஒருவர் ஒரு பதாகையுடன் இருக்கிறார். அவரின் படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பதாகையில், “எங்க அம்மா என்னை திருமணத்திற்கு என்னை ஒருவரை தேடுமாறு கூறியுள்ளார். ஆகவே என்னை திருமணம் செய்து கொள்வீரகளா ஸ்ரேயாஸ் ஐயர்?” என்று எழுதியுள்ளார்.
That's one way of shooting your shot! 👏#KKRHaiTaiyaar #RRvKKR #IPL2022 pic.twitter.com/FDaO7VOXdx
— KolkataKnightRiders (@KKRiders) April 18, 2022
அவரின் இந்தப் படத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இப்படியும் உங்களுடைய ஷாட்டை நீங்கள் அடிக்கலாம் என்று பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்