Thomas Cup 2022 Winner: வரலாறு சாதனை படைத்த இந்திய அணி... உற்சாகமளிக்க மத்திய அரசு 1 கோடி அறிவிப்பு!
தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. இந்தநிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்திய அணியின் சாதனையை போற்றும் வகையில் விதிகளை தளர்த்தி பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
As #TeamIndia defeats 14-time #ThomasCup Champions Indonesia (🇮🇳3-0🇮🇩) to win its 1️⃣st ever #ThomasCup2022, @IndiaSports is proud to announce a cash award of ₹ 1 crore for the team in relaxation of rules to acknowledge this unparalleled feat!
— Anurag Thakur (@ianuragthakur) May 15, 2022
Congratulations Team India!! https://t.co/QMVCvBDDZS
முன்னதாக, தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் 73 ஆண்டு கால வரலாற்றில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்