World Cup Score: அதிரடி ஆட்டம்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 2வது முறையாக அதிகபட்ச ஸ்கோர்! விவரம் இதோ!
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதன்படி, இன்று (நவம்பர் 12) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது அந்த ஜோடி.
பார்ட்னர்ஷிப்:
அதன்படி, 100 ரன்களை வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 51 ரன்கள் எடுத்தார். அதேபோல், ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். பின்னர் வந்த விராட் கோலி 51 ரன்கள், ஸ்ரேயாஸ் 128* ரன்கள், கே.எல்.ராகுல் 102 ரன்கள் என 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 410 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் 2 வது அதிகபட்ச ஸ்கோர்:
இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 410 ரன்கள் எடுத்ததே உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எடுத்துள்ள இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
முன்னதாக, கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பெர்முடா அணியுடன் விளையாடியது. அந்த போட்டியில், இந்திய அணி மொத்தம் 413 ரன்களை குவித்தது. இதில், கங்குலி 114 பந்துகளில் 89 ரன்களும், சேவாக் 87 பந்துகளில் 114 ரன்கள் குவித்தனர். அதேபோல், யுவராஜ் சிங் 57 ரன்களை எடுத்தார். இதுவே இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களை குவித்தது. இதில் இந்திய அணி வீரர்கள் இரண்டு பேர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். 158 பந்துகள் களத்தில் நின்ற கங்குலி 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என மொத்தம் 183 ரன்களை குவித்தார். அதேபோல், 129 பந்துகள் களத்தில் நின்ற ராகுல் ட்ராவிட் 17 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 145 ரன்கள் குவித்தனர்.
அதேபோல், கடந்த 2011 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 370 ரன்களை குவித்தது. அந்த போட்டியில், 140 பந்துகள் களத்தில் நின்ற சேவாக் 14 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 175 ரன்கள் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 83 பந்துகள் களத்தில் நின்ற விராட் கோலி 100 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை குவித்தது.
மேலும் படிக்க: World Cup Innings: நெதர்லாந்துக்கு எதிரான போட்டி... இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் செய்த சாதனை... விவரம் இதோ!
மேலும் படிக்க: IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி..? முழு விவரம் உள்ளே!