Ind Vs Eng 3rd Test Update: கிளவுஸ் மோசடியில் ரிஷப் பாண்ட்: கண்டுபிடித்த நடுவர்கள்: நடு மைதானத்தில் நடந்த பஞ்சாயத்து!
இங்கிலாந்து அணியின் மலான் 70 ரன்கள் எடுத்திருந்தப்போது தான் சிராஜ் பந்து வீச்சில் அவர் அவுட்டாகி வெளியேறினார். இந்த தருணம் தான் விளையாட்டு மைதானம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இங்கிலாந்திற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியின் நடுவில் ரிஷப் பண்ட் செய்த காரியம் மைதானம் முழுவதும் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது. இதனையடுத்து சர்ச்சைக்குக் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷிப் பண்ட்டின் கையுறை கழட்டச்சொன்ன வீடியோ தற்போது வைரலாகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியது. தற்போது இவ்விரு அணிகளும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 78 ரன்களில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 432 ரன்கள் எடுத்திருந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் மலான் 70 ரன்கள் எடுத்திருந்தப்போது தான் சிராஜ் பந்து வீச்சில் அவர் அவுட்டாகி வெளியேறினார். இந்த தருணம் தான் விளையாட்டு மைதானம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது என்பதோடு பெரும் சர்ச்சையினை கிளப்பியது என்று தான் கூற வேண்டும்.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
ஆம் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மலான் அடித்த பந்தை இந்தியா விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாதுர்த்தியமாக கேட்ச் பிடித்துள்ளார். இதனை கவனித்த நடுவர்கள் ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்ந்து இந்த ஷாட்டை மட்டும் மீண்டும் ரீப்ளே செய்து பார்த்துள்ளனர். அதில் விக்கெட்ட கீப்பரான ரிஷப் பண்ட் வழக்கத்திற்கு மாறாக தன்னுடையக் கையுறைகளை அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை அழைத்து நடுவர்கள் இத்தகவலைத் தெரிவித்தனர். பின்னர் போட்டிகளுக்கு இடையில் மைதானத்தில் ரிஷப் பண்ட், விராட் கோலி மற்றும் நடுவர்கள் விவாதித்த நிகழ்வு பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது. அதில் இந்திய விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கிளவுஸில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை அகற்றுமாறு நடுவர்களை வலியுறுத்தியதையடுத்து கேப்டன் விராட் கோலி அதனை அகற்றினார். இந்த செயல் மைதானம் முழுவதும் பெரும்பரப்பினை ஏற்படுத்தியதோடு சிறிது காலம் ஆட்டம் ஒத்திவைக்கபட்டிருந்தது. மேலும் இதுத்தொடர்பான வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
முன்னதாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஐசிசி விதிகளுக்கு மீறான கையில் கிளவுஸினை ஒட்டியிருப்பதாக கேப்டன் விராத்கோலியிடம் நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இவ்விதிகளின் படி, விக்கெட் கீப்பர் கையுறைகளை அணிந்தால், ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை இணைப்பதைத் தவிர விரல்களுக்கு இடையில் எந்த கேப்பும் இருக்காது. ஆனால் இங்கிலாந்து – இந்தியா நடைபெற்ற போட்டிகளில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட , வழக்கத்திற்கு மாறாக கீப்பிங் கிளவுஸில் நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலை சேர்த்து டேப் அடித்திருந்தார். அதை கவனித்த நடுவர்கள் அதனை அகற்றுமாறு தெரிவித்தனர். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இதே போன்று கிளவுசில் டேப் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.