மேலும் அறிய

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !

வரும் 18ஆம் தேதி சவுதாம்டன் நகரில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்க உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி சவுதாம்டன் நகரில் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி நல்ல போட்டி பயிற்சியுடன் களமிறங்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் நடைபெறவில்லை. கடைசியாக இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 

அதற்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் களமிறங்கினர். ஐபிஎல் தொடரும் கடந்த மே மாதம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சரியான போட்டி பயிற்சி இல்லாமல் இந்திய வீரர்கள் உள்ளனர். மேலும் கொரோனா காலம் என்பதால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக அதிக நாட்கள் தனிமைபடுத்து கொண்டும் இருந்துள்ளனர். இந்தச் சூழலில் வரும் இறுதிப் போட்டியில் ஃபார்மில் உள்ள நியூசிலாந்து அணியிடம் இருந்து இந்திய அணி சந்திக்க உள்ள பிரச்னைகள் என்னென்ன?

தேவான் கான்வே:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !

நியூசிலாந்து அணியில் முதல் முறையாக கடந்த 2020ஆம் ஆண்டு கான்வே களமிறங்கினார். அவர் அறிமுகமாகிய பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய ஒருநாள் போட்டிகளின் சராசரி75.00, டி20 போட்டிகளின் சராசரி 59.12, டெஸ்ட் போட்டிகளின் சராசரி 101.00 என்ற அனைத்து சிறப்பாக உள்ளது. குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு நல்ல துவகத்தை அவர் கொடுத்து வருகிறார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அறிமுக போட்டியில் 200 மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 80 ரன்கள் என அசத்தியுள்ளார். சிறப்பான ஃபார்மில் உள்ள கான்வேயை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். 

வேகப்பந்துவீச்சு கூட்டணி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !

பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்வீங் மற்றும் வேகப்பந்து வீச்சிற்கு சற்று தடுமாறுவார்கள். அந்தவகையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி இந்திய அணியை அச்சுற்றும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால், தற்போது நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் முதல் போட்டியில் டிம் சவுதி இரண்டு இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தினார். மற்றொரு பந்துவீச்சாளர் கையில் ஜேமிசென் சிறப்பாக பந்துவீசினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. அப்போது போல்ட், ஹென்ரி கூட்டணி களமிறங்கி இங்கிலாந்து வீரர்களை தடுமாற வைத்தது. ஆகவே அந்த அணியின் நான்கு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதுவும் இந்திய அணிக்கு பெரிய பிரச்னையாக இருக்கும். 

நியூசிலாந்து பேட்டிங் ஃபார்ம்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !

நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஃபார்மும் தற்போது சிறப்பாக உள்ளது. கான்வே மட்டுமல்லாமல், வில் யங், ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிளன்டல் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்களுடன் காயத்தில் இருந்து மீண்டு கேன் வில்லியம்சனும் வந்தால் அந்தப் பேட்டிங் வரிசை மிகவும் சவாலான ஒன்றாக அமையும். குறிப்பாக இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் ஃபார்முக்கு வந்தது நியூசிலாந்து அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நியூசிலாந்து பேட்டிங்கை கட்டுப்படுத்துவதும் பெரிய சவாலாக அமையும். 

இங்கிலாந்தில் தொடர் வெற்றி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடர் வெற்றியுடன் களமிறங்க உள்ளது. இங்கிலாந்து தொடருக்காக ஒரு மாதம் முன்பாகவே நியூசிலாந்து அணி இங்கு வந்து பயிற்சி செய்து வருகிறது. அத்துடன் முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது உடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. வெற்றியுடன் மட்டுமல்லாமல் சிறப்பான மேட்ச் பயிற்சியுடனும் நியூசிலாந்து அணி களமிறங்கும் என்பதால் அதுவும் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இவ்வாறு இந்திய அணி முன்பாக பல பிரச்னைகள் இருந்தாலும் இவை அனைத்திற்கு சரியான திட்டங்களை வகுத்து இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எனவே வரும் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Faf du Plessis Health : நினைவை இழந்த ஃபாப் டூப்லெஸிஸ் - சோகத்தில் ரசிகர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget