FIFA World Cup : உலகமே எதிர்பார்க்கும் உலகக்கோப்பை..! சட்டவிரோத ஒளிபரப்புக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ய இணையதளங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற VIACOM 18 MEDIA தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
VIACOM 18 MEDIA நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்து உரிமை பெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிப்பரப்பு செய்ய உரிமம் பெற்றுள்ளது. இந்தநிலையில் இணையதளங்கள் சட்டவிரோதமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் VIACOM 18 MEDIA நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
ஃபிபா உலகக் கோப்பை :
ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்னும் ஒரே நாளில் தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.
கால்பந்து போட்டி அட்டவணை
நவம்பர் 20
கத்தார் vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி
நவம்பர் 21
செனகல் vs நெதர்லாந்து - பிற்பகல் 3.30 மணி
இங்கிலாந்து vs ஈரான் - மாலை 6.30 மணி
நவம்பர் 22
அமெரிக்கா vs வேல்ஸ் - அதிகாலை 12.30 மணி
அர்ஜெண்டினா vs சவுதி அரேபியா - பிற்பகல் 3.30 மணி
டென்மார்க் vs துனிசியா - மாலை 6.30 மணி
மெக்சிகோ vs போலாந்து - இரவு 9.30 மணி
நவம்பர் 23
பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - அதிகாலை 12.30 மணி
மொராக்கோ vs குரேஷியா - பிற்பகல் 3.30 மணி
ஜெர்மனி vs ஜப்பான் - மாலை 6.30 மணி
ஸ்பெயின் vs கோஸ்டா ரிகா - இரவு 9.30 மணி
நவம்பர் 24
பெல்ஜியம் vs கனடா - அதிகாலை12.30 மணி
சுவட்சர்லாந்து vs கேமரூன் - பிற்பகல் 3.30 மணி
உருகுவே vs தென்கொரியா - மாலை 6.30 மணி
போர்ச்சுக்கல் vs கானா - இரவு 9.30 மணி
நவம்பர் 25
பிரேசில் vs செர்பியா- அதிகாலை 12.30 மணி
வேல்ஸ் vs ஈரான் - பிற்பகல் 3.30 மணி
கத்தார் vs செனகல் - மாலை 6.30 மணி
நெதர்லாந்து vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி
நவம்பர் 26
இங்கிலாந்து vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி
துனிசியா vs ஆஸ்திரேலியா - பிற்பகல் 3.30 மணி
போலாந்து vs சவுதி அரேபியா - மாலை 6.30 மணி
பிரான்ஸ் vs டென்மார்க் - இரவு 6.30 மணி
நவம்பர் 27
அர்ஜெண்டினா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி
ஜப்பான் vs கோஸ்டா ரிகா - பிற்பகல் 3.30 மணி
பெல்ஜியம் vs மொராக்கோ - மாலை 6.30 மணி
குரோஷியா vs கனடா - இரவு 9.30 மணி
நவம்பர் 28
ஸ்பெயின் vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி
கேமரூன் vs செர்பியா - பிற்பகல் 3.30 மணி
தென் கொரியா vs கானா - மாலை 6.30 மணி
பிரேசில் vs சுவட்சர்லாந்து - இரவு 9.30 மணி
நவம்பர் 29
போர்ச்சுக்கல் vs உருகுவே - அதிகாலை 12.30 மணி
நெதர்லாந்து vs கத்தார் - இரவு 8.30 மணி
ஈக் வேடார் vs செனகல் - இரவு 8.30 மணி
நவம்பர் 30
வேல்ஸ் vs இங்கிலாந்து - அதிகாலை 12.30 மணி
ஈரான் vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி
துனிசியா vs பிரான்ஸ் - இரவு 8.30 மணி
ஆஸ்திரேலியா vs டென் மார்க் - இரவு 8.30 மணி
டிசம்பர் 1
போலாந்து vs அர்ஜெண்டினா - அதிகாலை 12.30 மணி
சவுதி அரேபியா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி
குரோஷியா vs பெல்ஜியம் - இரவு 8.30 மணி
கனடா vs மொராக்கோ - இரவு 8.30 மணி
டிசம்பர் 2
ஜப்பான் vs ஸ்பெயின் - அதிகாலை 12.30 மணி
கோஸ்டா ரிகா vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி
தென் கொரியா vs போர்ச்சுக்கல் - இரவு 8.30 மணி
கானா vs உருகுவே - இரவு 8.30 மணி
டிசம்பர் 3
கேமரூன் vs பிரேசில் - அதிகாலை 12.30 மணி
செர்பியா vs சுவிட்சர்லாந்து - அதிகாலை 12.30 மணி