மேலும் அறிய

வெடித்த அண்ணாமலை...இது பட்ஜெட்டா, வெறும் காகிதம்! கடனே 9.62 லட்சம் கோடி, ஆனால் குஜராத்..

Annamalai: 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்று விளம்பர அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு, தனது ஆண்டொரு நாள் கடமையை நிறைவு செய்திருக்கிறார் . தனது தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்புப் பொதுமக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது இந்த பட்ஜெட் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளர்.  

தமிழ்நாடு பட்ஜெட் 2025:

தமிழ்நாட்டின் வரும் 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான , ஆண்டு நிதி நிலை அறிக்கை ( பட்ஜெட் ) இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து , வரும் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு  திட்டங்கள் குறித்தான் அறிவிப்புகளை வெளியிட்டார். 

Also Read: TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...

இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது “ 

”வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை”

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையான, 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி  நிரந்தரம்  செய்யப்படுவார்கள்,  பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும், என எந்த வாக்குறுதிகள் குறித்தும், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

”பேருந்து சாலையில் ஓடவில்லை”

ஆனால், வழக்கமாக, திமுக பட்ஜெட்டில், அறிக்கையளவிலேயே நின்று விடும் அறிவிப்புகளான, வடசென்னை வளர்ச்சித் திட்டம், அடையாறு சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி, மின்சாரப் பேருந்துகள், இந்து ஆலயங்களை புனரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை தவறாது இடம்பிடித்திருக்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நான்கு ஆண்டுகளில், இவர்கள் அறிவித்த மின்சாரப் பேருந்துகள் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. ஆனால், அவற்றில் ஒரு பேருந்து கூட இன்னும் சாலையில் ஓடவில்லை என்பதுதான் நகைச்சுவை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது. 

”ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை”

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.7,890 கோடி ரூபாய்  அறிவித்தார்களே தவிர ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு, ஒகேனக்கல் என்ற பெயரே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இது தவிர, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பெயர்மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் தவிர, மக்களுக்கான எந்தத் திட்டங்களும் இல்லாத, வழக்கமான திமுக பட்ஜெட்டாகவே இந்த ஆண்டும் இருக்கிறது.

நாட்டிலேயே அதிக கடன் சாதனை:

தமிழக அரசின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, டாஸ்மாக் மதுபான விற்பனை. சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது. மது விற்பனை வருமானம் இல்லாத குஜராத் அரசு, ரூ. 19,695 கோடிக்கு வருமான மிகை பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் தமிழகம் ரூ.46,467 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது. குஜராத் அரசு உட்கட்டமைப்புக்குச் செலவிடும் தொகை ரூ.95,472 கோடி. தமிழகம் அதை விட மிகக் குறைவாக, ரூ.57,231 கோடி மட்டுமே உட்கட்டமைப்புக்குச் செலவிடுகிறது. குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கையில், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்காக, ரூ.9.62 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை.

”ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது”

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. வெற்று விளம்பர அறிவிப்புகளும், அதற்கான வீண் செலவுகளும் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது  திமுக என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?
Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?
TN Budget 2025 Women Welfare: அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
இந்திய ராணுவத்தில் சேரனுமா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இந்திய ராணுவத்தில் சேரனுமா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Embed widget