10th Hall Ticket 2025: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே...உங்களுக்குத்தான்- முக்கிய அறிவிப்பு!
10th Hall Ticket Download 2025 Tamil Nadu: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளது.

2024- 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளது.
பெறுவது எப்படி?
- தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில், ஹால் டிக்கெட் என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.
- அந்த பக்கத்தில் தோன்றும் இணைப்பை பார்க்கவும். அல்லது நேரடியாகவே https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இணைப்பையும் க்ளிக் செய்யலாம்.
- அதில் விண்ணப்ப எண், பிறந்த தேதி, கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
திருத்தங்கள் இருந்தால்...
ஏற்கெனவே மார்ச்/எப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுக வேண்டும். அவ்வாறு அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்ப் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
பொதுத் தேர்வு எப்போது?
மார்ச் - 2025, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1729853324.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
தேர்வு முடிவு எப்போது?
2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறது. பின் ஏப்ரல் 15 ஆம் தேதியும் முடிவடைகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 19 ஆம் தேதியும் வெளியாக உள்ளன. 10-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றது.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

