Rajinikanth: 30 நிமிடங்களில் முடிக்க வேண்டியதை 10 நிமிடத்தில் முடிச்சிடுவேன் - அனைவரையும் அசர வைத்த ரஜினியின் திறமை!
நடத்துனராக பணியாற்றிய , தன்னை பார்த்து மற்றவர்கள் வியந்த திறமை பற்றி சூப்பர் ஸ்டார் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நடிகராவதற்கு முன்பு ரஜினிகாந்த் நடத்துனராக பணியாற்றியது பற்றி அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் அறிந்த ஒன்று தான். அதைப் பற்றி நடிகர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். அவரின் இந்த பட்டத்தை பறிக்க முயன்றால் கூட காக்கா - கழுகு கதையெல்லாம் இழுத்து சமூக வலைத்தளத்தில் ஒரு ரணகளமே நடக்கும்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தலைவரு 74 வயதை எட்டியும் கூட இன்னும் சுறுசுறுப்பாக.. துறுதுறுப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்தின் 171ஆவது படமாக கூலி படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தனது 172ஆவது படமான ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.
கடந்த 1975 ஆம் ஆண்டில் நடக்க தொடங்கிய ரஜினிகாந்த் இப்போது 50 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். விரைவில் ரஜினிகாந்த் 50 ஆண்டு விழா கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்து வேட்டையன் வரையில் ஏராளமான வெற்றி தோல்விகளை கொடுத்துள்ளார். சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பககாலகட்டங்களில் வருடத்திற்கு 15க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார். இப்போது ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறது.
ஒட்டு மொத்த உலக மக்கள் கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் உயர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து ஒரு முறையாவது நடித்துவிட மாட்டோமா என்பது பலரது கனவாகவும் இருக்கிறது. இவரை மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்து காட்டுவது அவரது ஸ்டைல் தான்.
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொன்னது மாதிரி வயசானாலும் அழகும், ஸ்டைலும் இன்னும் அவரைவிட்டு போகவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் தான் நடிகர் சங்க கலாச்சார நிகழ்வின் போது ரஜினிகாந்த் தனது கடந்த காலங்களை பற்றி பேசியிடுக்கிறார். அதில், அவர், தனது நடத்துனர் நாட்களைப் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
எனக்கு ஸ்டைல் ரொம்பவே பிடிக்கும். இயற்கையாகவே அது அமைந்துவிட்டது. நான் பெங்களூருவில் நடத்துனராக பணியாற்றிய போது எல்லா பயணிகளுக்கும் டிக்கெட் கொடுக்க 10 நிமிடங்கள் மட்டுமே தான் எனக்கு எடுத்து கொள்ளும். ஆனால், பேருந்தில் டிக்கெட் கொடுக்க மற்றவர்களுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், நான் 10 நிமிடங்களிலேயே கொடுத்துவிடுவேன். அன்றைய காலகட்டங்களில் பெண்கள் முன் வரிசையில், ஆண்கள் பின் வரிசையில் தான் பேருந்துகளில் அமர்ந்திருப்பார்கள்.
மேலும், டிக்கெட் கொடுத்து முடித்த பிறகு நடத்துனர் பின்னால் தான் இருப்பார்கள். ஆனால், நான் முன்னாள் தான் நிற்பேன். எனக்கு முடி அதிகமாக இருக்கும். காற்று வீசும் போது முடி கலையும். நான் என்னுடைய தலைமுடியை புரட்டுவது என்னுடைய ஸ்டைல். அப்படிதான் நான் என்னுடைய ஸ்டைலை உள்வாங்கிக் கொண்டு சினிமாவிலும் காட்ட ஆரம்பித்தேன் என்று தனது ஆரம்பகாலங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

