Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் ஒரே சீசனில் 900 ரன்களுக்கு அடித்து, 30 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த பியூ வெப்ஸ்டர் இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் புத்தாண்டு டெஸ்டில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக புதுமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அறிமுகவுள்ளார்.
யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
பியூ ஜேக்கப் வெப்ஸ்டர் டிசம்பர் 1, 1993 அன்று ஹோபார்ட் அருகே அமைந்துள்ள ஸ்னக் என்ற ஊரில் பிறந்தார். வெப்ஸ்டர் என்பது ஆஸ்திரேலிய உள்நாட்டு வட்டாரங்களில் பிரபலமான பெயராகும். கிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த இவர் டாஸ்மேனியாவுக்காக U-17, U-19, U-23 கிரிக்கெட்டில் விளையடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் படிங்க: Gautam Gambhir: கம்பீர் அல்ல, பிசிசிஐ செய்த பெரிய தவறு..! புஜாராவை கழற்றிவிட்டது யார்? BGT தொடரி தோல்விக்கான காரணம்..!
மித வேகப்பந்து வீச்சளாரான, வெப்ஸ்டர் 93 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 37.83 சராசரியுடன் 5297 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்கள் அடங்கும். அவர் 54 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடி 31.35 சராசரியில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களுடன் 1317 ரன்கள் எடுத்துள்ளார்.
வெப்ஸ்டர் 93 டி20 போட்டிகளில் விளையாடி 11 அரைசதங்கள் உட்பட 26.98 சராசரி மற்றும் 118.71 ஸ்ட்ரைக் ரேட்டில் 1700 ரன்களை குவித்துள்ளார்.
31 வயதான ஆல்ரவுண்டரான இவர் 37.39 சராசரியில் 148 முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் மூன்று நான்கு விக்கெட்கள் மற்றும் இரண்டு ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.
இதையும் படிங்க: Gautam Gambhir : ”நேர்மையாக இருக்க வேண்டும்” டிரெஸ்ஸிங் ரூம் சர்ச்சை.. மவுனம் கலைத்த கம்பீர்
கடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் ஒரே சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுத்த மற்றும் 30 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார், உள்ளூர் போட்டிகளில் இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது, இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கார்பீல்ட் சோபர்ஸ் இந்த சாதனையை படைத்தார்.
வெப்ஸ்டர் இதுவரை பிக் பாஷ் லீக்கில் (BBL) 1463 ரன்கள் குவித்து 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் பிபிஎல்லில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளை விளையாடியுள்ளார்,இந்த சீசனில் அவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு தலைவலியாக இருப்பார்:
வெப்ஸ்டரின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அவரை ஆஸ்திரேலியாவுக்கு கண்டிப்பாக பலம் சேர்க்கும், பட்சத்தில் அவரது அறிமுகம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இக்கட்டான சமயங்களில் இறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கும் அவரது திறமை மற்றும் 6.5 அங்குலம் உயரம் அவரது பந்துவீச்சுகும் பெரிதும் உதவும், அதே போல இந்திய அணி பேட்ஸ்மேன்கள் உயரம் அதிகமுள்ள பந்துவீச்சார்களிடம் தடுமாறுவார்கள், அதனால் வெப்ஸ்டர் இந்திய அணி பேட்டர்களுக்கு சவாலாக இருப்பார்கள். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு வெப்ஸ்டர் வலு சேர்ப்பதால் இந்திய அணி இவரை எதிர்த்து ஆடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாதன் மெக்ஸ்வீனி மற்றும் சாம் கான்ஸ்டாஸுக்குப் பிறகு நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் வெப்ஸ்டர் மூன்றாவது அறிமுக வீரராக இருப்பார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி(w), பேட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்