மேலும் அறிய

NZ vs SL Match Highlights: 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல்; அரையிறுதிக்கு தகுதி பெற்றதா நியூசிலாந்து?

NZ vs SL Match Highlights: இலங்கை அணியின் தீக்‌ஷனா 91 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

NZ vs SL Highlights:  உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டிகளில் ஒன்றாக இன்றைய போட்டி பார்க்கப்பட்டது. 

இந்த தொடரின் தொடக்கத்தில் மிகவும் வலுவான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து அணி அதன் பின்னர் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால் நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. 

இப்படியான நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இலங்கை அணி  46.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டினையும் இழந்து 171 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மொத்தம் 7 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. போல்ட் மூன்று விக்கெட்டுகளும் சாண்ட்னர், ஃபெர்குசன் மற்றும் ரவீந்திரா தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இலங்கை அணியின் தீக்‌ஷனா 91 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் ’லட்டு போல பந்து வீசினார்கள்’. பொதுவாகவே பெங்களூரு மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கு நியூசிலாந்து அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிறிய இலக்கு என்பது அவர்களுக்கு ஏதோ வார்ம்-அப் மேட்ச் விளையாடுவதைப் போல் இருந்தது. இதனால் நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி சிறப்பாக முன்னேறிச் சென்றது. 

குறிப்பாக இலங்கை அணி தரப்பில் வீசப்பட்ட அனைத்து ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியாவது விளாசினர் நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேவிற்குப் பிறகு அரைசதத்தினை எட்டும் தருவாயில் தங்களது விக்கெட்டினை அடுத்தடுத்து இழந்தனர். ஆனால் இவர்களின் விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி வெற்றியை எட்டுவதில் எந்தவிதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இலங்கை அணி தரப்பில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தால் போட்டி சுவாரஸ்யமாக சென்றிருக்கும். 

நியூசிலாந்து அணி தரப்பில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை எளிதில் எட்டவேண்டும் எனும் முனைப்பில் இருந்தனர்.  வெற்றியை விரைவில் எட்டினால் புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையிலும் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்க முடியும் என்பதால் அரையிறுதியை நோக்கமாகக் கொண்டு விளையாடினர். 

இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பினை சற்று பிரகாசமாக்கியுள்ளது. நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதா என்பதை பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவைப் பொறுத்துதான் கூறமுடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget