மேலும் அறிய

ODI World Cup 2023 Marco Jansen : உலகக் கோப்பை தொடர்... விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 2 விக்கெட்...மார்கோ ஜான்சன் சாதனை!

இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும்  2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் மார்கோ ஜான்சன். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன். 

முதல் போட்டி:


கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதில் மொத்தம் 10 ஓவர்கள் வீசிய மார்கோ ஜான்சன் 92 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இரண்டாவது போட்டி: 


ஆஸ்திரேலிய அணியை கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி  எதிர்கொண்டது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் 7 ஓவர்கள் வீசிய  மார்கோ ஜான்சன் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


மூன்றாவது போட்டி:

கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர் கொண்டது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியில், நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 8 ஓவர்கள் வீசினார்.

அதில் 1 ஓவர் மெய்டன் செய்து 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மழை காரணமாக இந்த போட்டியில் 43 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

நான்காவது போட்டி:


கடந்த முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணியுடன் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி விளையாடியது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.


இதில், மார்கோ ஜான்சன் மொத்தம் 5 ஓவர்கள் வீசினார். 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஐந்தாவது போட்டி:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க  அணி.

அதன்படி, இன்றைய போட்டியில்  இதுவரை 6 ஓவர்கள் வீசியுள்ள நிலையில், 1 ஓவர் மெய்டன் செய்து 25 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இப்படி இந்த உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் மார்கோ ஜான்சன்.

மேலும் படிக்க: 2007 முதல் தொடரும் சோகம்; 15 ஆண்டுகளாக இலங்கையிடம் தோற்கும் இங்கிலாந்து - இதுவரை நடந்தது என்ன?

 

மேலும் படிக்க: PAK Vs SA LIVE Score: பாகிஸ்தானின் ஆஸ்தான வீரர்களை தட்டித் தூக்கிய தென்னாப்பிரிக்கா; வேகத்திடம் தாக்கு பிடிப்பார்களா டைல் எண்டர்ஸ்?

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget