மேலும் அறிய

PAK Vs SA LIVE Score: போராடித் தோற்ற பாகிஸ்தான்; த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

PAK Vs SA LIVE Score Updates: பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

LIVE

Key Events
PAK Vs SA LIVE Score:  போராடித் தோற்ற பாகிஸ்தான்; த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

Background

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 

13வது உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இந்த தொடரில் களம் கண்டுள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் போட்டி நடந்து வரும் நிலையில் இதுவரை 25 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்வதால் ரசிகர்கள் அடுத்து வரும் போட்டிகளையும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

அந்த வகையில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறுகிறது. 

சொதப்பும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை தோற்கடித்து கம்பீரமாக தொடங்கியது. ஆனால் அடுத்ததாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியிடன் படுதோல்வி அடைந்தது அந்த அணியை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்று பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

அந்த அணியின் பேட்டிங் பலமாக இருந்த போதிலும், மோசமான சுழற்பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டமும் சென்னை மைதானத்தில் தான் நடைபெற்றது என்பதால் ஓரளவு மைதானம் பற்றிய கணிப்பை கொண்டு இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற போராடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

அதிரடி எழுச்சி கண்ட தென்னாப்பிரிக்கா 

உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்கா அணி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த அணி நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை தழுவியது, ஆனால் இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளை வீழ்த்தி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. நிச்சயம் அரையிறுதிக்கும் அந்த அணி செல்லும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகள் 300 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்துள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் சமாளிப்பது சற்று கடினம் என்பதால் இப்போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பது நிதர்சனம். இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 1 நேரலை செய்கிறது.  

22:59 PM (IST)  •  27 Oct 2023

PAK Vs SA LIVE Score: இந்த போட்டியில் எக்ஸ்ட்ராஸ் விபரம்..!

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 40 ரன்கள் எக்ஸ்ட்ராக்களாக வாரி வழங்கியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா 19 ரன்களும் பாகிஸ்தான் 21 ரன்களும் வாரி வழங்கியுள்ளன. 

22:57 PM (IST)  •  27 Oct 2023

PAK Vs SA LIVE Score: சிக்ஸர்கள் விபரம்..!

இந்த போட்டியில் மொத்தம் 16 சிக்ஸர்கள் பறக்க விடப்பட்டுள்ளது. இரு அணிகள் தரப்பிலும் தலா 8 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

22:55 PM (IST)  •  27 Oct 2023

PAK Vs SA LIVE Score: இந்த போட்டியில் பவுண்டரிகள் விபரம்

இந்த போட்டியில் இரு அணிகளின் தரப்பிலும் மொத்தம் 44 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் 23 பவுண்டரியும் தென்னாப்பிரிக்கா 21 பவுண்டரியும் விளாசியுள்ளது. 

22:52 PM (IST)  •  27 Oct 2023

PAK Vs SA LIVE Score: ஆட்டநாயகன்..!

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டநாயகன் விருது தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் ஷாம்ஷிக்கு வழங்கப்பட்டது. இவர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

22:48 PM (IST)  •  27 Oct 2023

PAK Vs SA LIVE Score: புள்ளிப்பட்டியலில் முதல் இடம்..!

பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட்டி வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK Alliance

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget