Kagiso Rabada: ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்... சாதனை பட்டியலில் இடம் பிடித்த ககிசோ ரபாடா!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ககிசோ ரபாடா பெற்றுள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 15 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வருகிறது.
அதன்படி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒரு சதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
நெதர்லாந்து அணி வீரர் விக்ரம்ஜித் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனயை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர்கள் ஆலன் டொனால்ட், மோர்னே மோர்கல் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் 89 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான டேல் ஸ்டெய்ன் 95 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எடுத்து சாதனை செய்துள்ளார்.
Fastest to 150 ODI wickets for South Africa in terms of Matches:
— 𝐙𝐞𝐞𝐬𝐡𝐚𝐧 𝐍𝐚𝐢𝐲𝐞𝐫 𝐈 ذیشان 𝐈 ज़ीशान 𝟐.0 (@zeeshan_naiyer2) October 17, 2023
Allan Donald - 89
Morne Morkel - 89
Imran Tahir - 89
Kagiso Rabada- 95*
Dale Steyn - 95#SAvsNED #SAvNED #ICCWorldCup #ICCMensCricketWorldCup2023 #ICCCricketWorldCup23 #dharmashala #Rabada #CricketTwitter pic.twitter.com/kS3dWdzbpU
ககிசோ ரபாடாவின் புள்ளி விவரம்:
ககிசோ ரபாடா 89 போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் சராசரி 27.14. ஸ்டைரைக் ரேட் 32.18.
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார். மேலும், 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்து வீச்சுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதேபோ, 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 280 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் டெஸ்ட் மேட்ச் சராசரி 22.34 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 39.7 ஆகவும் உள்ளது.
இதில் 13 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார். மேலும் 56 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 69 ஐபிஎல் போட்டிகளில் 106 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி தற்போது விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: ICC ODI World Cup 2023: பிறந்தது தென்னாப்பிரிக்கா.. விளையாடுவது நெதர்லாந்து.. தாய்நாட்டிற்கு எதிராக விளையாடும் தலைமகன்கள்!
மேலும் படிக்க: ICC Cricket World Cup 2023: தொடர் தோல்வியில் இலங்கை... அரையிறுதிக்கு வாய்ப்பு இருக்கா? இல்லையா? ஒரு பார்வை!