மேலும் அறிய

Ind vs Pak:"அச்சச்சோ"அரையிறுதிக்கு ஆப்பு - பாகிஸ்தானை ஜெயிச்சா மட்டும் பத்தாது.. அதுவும் நடக்கனும்!

மகளிர் டி20 உலகக் கோப்பையில் நாளை (அக்டோபர் 6) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

மகளிர் டி20 உலகக் கோப்பை:

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்கியது.  இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?

அந்த வகையில் நேற்று (அக்டோபர் 5) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்தது மற்றும் நேற்றைய போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இச்சூழலில் தான் இந்திய அணி நாளை (அக்டோபர் 6) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள்:

முன்னதாக தங்களது முதல் போட்டியில் இலங்க அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முனைப்பில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. நேற்றைய போட்டியின் மோசமான தோல்வியை தொடர்ந்து இப்போதே இந்தியாவின் அரையிறுதி கனவு கிட்டத்தட்ட கேள்விகுறி ஆகியுள்ளது. நியூசிலாந்திடம் சந்தித்த படுதோல்வியால் -2.900 என்ற மோசமான ரன்ரேட்டை பெற்றுள்ள இந்தியா குரூப் ஏ பிரிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இச்சூழலில் தான் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெறும்?

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி துபாயில் UAE, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அக்டோபர் 6, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?

இந்தியா vs பாகிஸ்தான், பெண்கள் டி20 உலகக் கோப்பை 2024 குரூப் ஏ போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை டிவியில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?

இந்தியா vs பாகிஸ்தான், பெண்கள் டி20 உலகக் கோப்பை 2024 குரூப் ஏ போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்,  டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்திய வீராங்கனைகள்:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டில் சஜீவன்

பாகிஸ்தான் வீராங்கனைகள்:

பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பைக், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தார், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), சித்ரா அமின், சையதா அரூப் ஷா , தஸ்மியா ரூபாப், துபா ஹாசன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget