Virat Kohli: எதிர்பார்ப்பில் தென்னாப்பிரிக்கா தொடர்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் கோலி..
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் மூலம் பல புதிய சாதனைகளை படைக்க இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
Hello Thiruvananthapuram 👋
— BCCI (@BCCI) September 27, 2022
Time for the #INDvSA T20I series. 👍#TeamIndia | @mastercardindia pic.twitter.com/qU5hGSR3Io
இந்தநிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் மூலம் பல புதிய சாதனைகளை படைக்க இருக்கிறார். அவற்றின் முழு பட்டியலை கீழே காணலாம்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள்:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 13 போட்டிகளில் 362 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா 339 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் விராட் கோலி 10 போட்டிகளில் விளையாடி 254 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் கடந்த ஆசிய கோப்பை தொடரை போன்று விராட் கோலி ஜொலித்தால், நிச்சயம் ரோகித் சர்மாவை விட அதிக ரன் எடுத்து முதலிடம் பிடிக்கலாம்.
அதிக அரைசதம் :
விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் தற்போது வரை 33 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2 அரை சதங்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் விராட் கோலி மேலும் ஒரு அரை சதம் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை படைப்பார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் :
டி20 கிரிக்கெட்டில் ஆல் டைம் டாப் ஸ்கோரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைக்க 22 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் (ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட) விராட் கோலி இதுவரை 10,978 ரன்கள் குவித்துள்ளார். 22 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 11,000 ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.
அதேபோல், ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3694 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 3660 ரன்கள் குவித்து கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் விராட் கோலி 34 ரன்கள் எடுத்தால் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடிப்பார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா:
அணி | வெற்றி | தோல்வி | முடிவில்லை |
இந்தியா | 11 | 8 | 3 |
தென்னாப்பிரிக்கா | 8 | 11 | 3 |
- இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். இவர் தற்போது வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 362 ரன்கள் குவித்துள்ளார்.
- பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் தற்போது வரை 22 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன. அவற்றில் இந்தியா 11 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.