Happy Birthday Virat Kohli: ரன் மிஷின் விராட் கோலி...பிறந்த நாட்களில் எப்படி விளையாடி உள்ளார்? விவரம் இதோ!
விராட் கோலி இன்று (நவம்பர் 5) ஆம் தேதி தன்னுடைய 35 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். முன்னதாக அவர் தன்னுடைய பிறந்த நாள் அன்றும் ஒரு நாள் முன்பும், பின்புமாக நடைபெற்ற போட்டிகளில் எப்படி விளையாடியுள்ளார் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்:
இந்திய அணியின் ‘ரன் மிஷின்‘ என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் விராட் கோலி. தன்னுடைய அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்தவர், படைத்துக்கொண்டிருப்பவர். கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
2023-ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தொடரில் இதுவரை 7 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள கோலி 442 ரன்களை குவித்துள்ளார். மேலும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 37-வது லீக் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடி வருகிறது.
இச்சூழலில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 48 சதங்களை விளாசியுள்ள விராட் இன்றைய போட்டியில் சதம் விளாசி, ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரராக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பிறந்தநாளில்:
கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, கடந்த 2015 ஆம் ஆண்டு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய பிறந்த நாளான நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடினார். அவர் விளையாடிய அந்த டெஸ்ட் போட்டியில், 79 பந்துகள் களத்தில் நின்று ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் மொத்தம் 29 ரன்கள் எடுத்தார்.
இது தான் விராட் கோலி பிறந்த நாள் அன்று விளையாடிய முதல் போட்டி. முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் நவம்பர் 6 ஆம் தேதி விளையாடி உள்ளார். இந்த போட்டியில் விராட் கோலி மொத்தம் 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 3 ரன்களுடன் நடையை கட்டினார்.
அதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நவம்பர் 6 ஆம் தேதி விளையாடி உள்ளார். அந்த போட்டியில், 49 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நவம்பர் 4 ஆம் தேதி விளையாடி உள்ளார். இந்த போட்டியில் கோலி 65 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் நவம்பர் 6 ஆம் தேதி விளையாடி உள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி விளையாடிய கோலி 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் தான் பர்த்டே பாயாக இன்றைய போட்டியில் விளையாடும் கோலி எத்தனை ரன்கள் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: IND vs SA: டேபிள் டாப்பர்களில் யார் இன்று டாப்? ஈடன் கார்டனில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா! புள்ளி விவரம் என்ன?
மேலும் படிக்க: PAK vs NZ: நியூசிலாந்துக்கு வில்லனான மழை! பகர் ஜமானின் மிரட்டல் பேட்டிங்கால் பாகிஸ்தான் வெற்றி!