IND vs SA: டேபிள் டாப்பர்களில் யார் இன்று டாப்? ஈடன் கார்டனில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா! புள்ளி விவரம் என்ன?
தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை 2023ல் இன்று டேபிள் டாப்பர்களான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பை போட்டியில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஒருநாள் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியே முதலிடத்தில் உள்ளது. 42 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் 90 போட்டிகளில் விளையாடியுள்ளன. தென்னாப்பிரிக்கா 50, இந்தியா 37 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் முடிவு இல்லை.
இந்திய மண்ணில் கூட தென்னாப்பிரிக்கா அணியே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய மண்ணில் இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 42 முறை மோதியுள்ளன. இந்தியா தங்கள் சொந்த மண்ணில் 17 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா 25 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன்மூலம், அதிகபட்சமாக 14 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது.
மேலும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நடுநிலை மைதானங்களில் இதுவரை 21 முறை மோதியுள்ளன. அதிலும், அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 11 வெற்றிகளையும், இந்தியா 10 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா மூன்று முறையும், இந்தியா இரண்டு முறையும் வெற்றி கண்டுள்ளது.
2023 உலகக் கோப்பையில் யார் ஆதிக்கம்..?
2023 உலகக் கோப்பையில், குயின்டன் டி காக் 7 போட்டிகளில் 545 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 442 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா (402 ரன்கள்) ஐந்தாவது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ராம், ஹென்ட்ரிக் எராஸ்மஸ் வான் டெர் டுசென் ஆகியோரும் முதல் பத்து இடங்களில் உள்ளனர்.
இதுவரை தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜென்சன் 16 விக்கெட்டுகளையும்,ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். மேலும், இந்திய வீரர் முகமது ஷமி மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பிட்ச் அறிக்கை:
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி