சச்சினுக்கு கொரோனா- ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இந்தியா அணியை சச்சின் வழிநடத்தினார். இந்தப் போட்டிகளை காண மைதானத்திற்கு வர ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் உடலில் ஏற்பட்ட சில அறிகுறிகளை தொடர்ந்து சச்சினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரிய அளவிற்கு அறிகுறிகள் இல்லாததால் வீட்டிலேயே சச்சின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/dOlq7KkM3G" rel='nofollow'>pic.twitter.com/dOlq7KkM3G</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1375670454162239493?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவித்தார். சச்சினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவர் பூரண குணமடைய சிலர் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.