FIFA World Cup 2022 : "விரைவில் குணமடையுங்கள் பீலே" - பிரேசில் போட்டியின் போது ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்
கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே குணமடைய நெகிழ்ச்சியான சம்பவங்களைச் செய்துள்ளனர்.
கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே குணமடைய நெகிழ்ச்சியான சம்பவங்களைச் செய்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பிரேசில் - கேமரூன் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் கேமரூன் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் பிரேசில் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் போது பிரேசில் அணியின் ரசிகர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே விரைவில் குணமடைய Get Well Soon Pele என்ற வாசகத்தினையும் பீலேவின் புகைப்படமும் அடங்கிய மிகப்பெரிய பிரேசில் நாட்டு கொடியினை மைதானத்திற்கு கொண்டு வந்து தங்களது அன்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram
இதேபோல் பிரேசில் நாட்டிலும் அவர் விரைவில் குணமடைய பல்வேறு வடிவங்களில் ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
ரசிகர்களின் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை பார்த்த பீலே ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் என் மாதாந்திர உடல் பரிசோதனைக்காகத்தான் வந்துள்ளேன். கத்தாரில் இருந்து வரும் அன்புக்கு நன்றி, என தெரிவித்துள்ளார்.