ATP Rankings: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பட்டியலில் முதல் ஐம்பது இடங்களில் கூட இல்லாத ரோஜர் பெடரர்!
ATP Rankings:ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 7,950 புள்ளிகளுடன் மெத்வதேவ் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டுள்ளது.
Daniil Medvedev reclaims World No.1 ranking once again 🔥
— Sportskeeda Tennis (@SK__Tennis) June 13, 2022
Last time he remained World No.1 for 3 weeks only. Will he remain World No.1 for longer period this time? 👏#DaniilMedvedev #ATP #Ranking #WorldNo1 pic.twitter.com/azYmfogkyM
ரோஜர் பெடரர் 68-வது இடம்:
உலகின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், ஒரு காலத்தில் முதலிடன் வகித்த ரோஜர் பெடரர் 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் சமீபத்திய தரவரிசைபடி, ரோஜர் பெடரர் 850 புள்ளிகளுடன் 68-வது இடத்தில் உள்ளார். இது, அவர் தனது 18-வது வயதில் 2000-ஆம் ஆண்டு 67வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர், தரவரிசையில் முதல் 50 இடங்களில் கூட இடம்பெறாதது இதுவே முதல் முறை. பெடரர் காயம் காரணமாக சமீபத்தில் நடந்த டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
Back on 🔝 🔥
— ATP Tour (@atptour) June 13, 2022
Congratulations to @DaniilMedwed on reclaiming the World No. 1 spot on the Pepperstone ATP Rankings! 👏 pic.twitter.com/iQnPYSUeza
ATP Ranking Update:
இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 7,950 புள்ளிகளுடன் மெத்வதேவ் முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.
Roger Federer is out of Top 50 of ATP Ranking for the first time in 22 years 😢
— Sportskeeda Tennis (@SK__Tennis) June 13, 2022
Will he be back in Top 50? 🤔#RogerFederer #ATP #Ranking #Tennis pic.twitter.com/wcjsOgD46s
தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளார். பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்த லிபெமா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் டேனில் மெத்வதேவ் 2-வது இடம் பிடித்தார். இறுதி போட்டியில் முன்னணி வீரர் டேனியல் மெத்வதேவ்-க்கு அதிர்ச்சி தோல்வி அளித்து இளம் வீரர் டிம் வேன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.