மேலும் அறிய

Vaikunta Ekadasi: பக்தர்களே! புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி தெரியுமா?

Vaikunta Ekadasi 2023: மார்கழி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான வைகுண்ட ஏகாதசி தினம் பிறந்தது எப்படி என்பதை கீழே காணலாம்.

Vaikunta Ekadasi 2023 in Tamil: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு வாய்ந்தது ஆகும். அதில், மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மார்கழி மாதம் கருதப்படுகிறது. மார்கழி மாதம் வந்தாலே வைணவத் தளங்கள் களைகட்டி காணப்படும்.

வைகுண்ட ஏகாதசி 

இந்த மார்கழி மாதத்தில் வரும் நாட்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று கண்விழித்து கோயிலில் சாமி தரிசனம் செய்தால் ஏராளமான நன்மைகளும், புண்ணியமும் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். அந்த வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது தெரியுமா. இதில் விரிவாக காணலாம்.

விண்ணுலகத்தில் தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் ஒருவன் அச்சுறுத்தி வந்தான். இதனால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அவனது சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.  தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு முரனிடம் போரிட்டார்.

பிறந்தது எப்படி?

முரனிடம் போரிட்டு அந்த போரில் மகாவிஷ்ணு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு பிறகு மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணுவிடம் தோல்வியை தழுவிய முரன் மகாவிஷ்ணுவை நோக்கி வாளுடன் பாய்ந்து வந்தான். அப்போது, மகாவிஷ்ணு தன் உடலில் இருந்து மாபெரும் சக்தி ஒன்றை பெண்ணாக வெளிப்படுத்தினார். அந்த பெண் முரனுடன் போரிட்டார். அந்த பெண் முரனை வென்றார்.

அந்த அசுரனை வீழ்த்தி தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். முரனை வீழ்த்திய அந்த நாள் ஏகாதசி என்றும், அந்த நாளில் பெருமாளை வணங்குபவர்களுக்கு வைகுண்ட பதவி வழங்கப்படும் என்றும் பெருமாள் வரம் அளித்தார். இந்த நாளே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்கள் வைகுண்ட ஏகாதசி உருவானதாக கூறுகின்றன.

பக்தர்கள் பரவசம்:

வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து பெருமாள் கோயில்களிலும் இரவு முழுக்க சிறப்பு ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் கோயில்களில் ஆயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மார்பஞ்சாங்கத்தில் மொத்தம் 15 திதிகள் உள்ளன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திதியாக ஏகாதசி திதி கருதப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget