மேலும் அறிய

மயிலாடுதுறையில் பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி

மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த துலா உற்சவம் தொடக்கியதை அடுத்து சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. 

ஐப்பசி மாதத்தின் முதல் நாளை ஒட்டி மயிலாடுதுறையில் பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். 

மயிலாடுதுறையில் பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி

சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். அதேபோன்று பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு  வருகிறது.

மயிலாடுதுறையில் பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி

சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியீல் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று ஐப்பசி மாதம் 1-ம் தேதி துலா உற்ச்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு  ஐய்யாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளில் அஸ்த்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி

Bigg Boss 6 Tamil : தாய் பாசத்தால் தவிக்கும் ஷிவின்.. பார்வையாளர்களை கண்கலங்க வைத்த வீடியோ!

மயிலாடுதுறையில் பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி

தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து மகாதீபாரதனை நடைபெற்றது. மாயூரநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதால் துலா உற்சவ நிகழ்ச்சியில் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதம் முழுவதும் பக்தர்கள் புனித நீராடுவர்கள்,  தொடர்ந்து ஐப்பசி 30 அன்று கடைமுக தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்றவுள்ளது.

The Rising Star 2022 : மிஸ் சென்னை அழகிக்கு விருது வழங்கும் புகழ் மற்றும் கவின்... தி ரைசிங் ஸ்டார் 2022

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Sai Pallavi - Sivakarthikeyan  : தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
Embed widget