மேலும் அறிய
Ravindra jadeja : சி.எஸ்.கே ரசிகர்கள் தாக்கப்பட்டார்களா?.. ரசிகர்களை கேலி செய்து ட்வீட் செய்த ஜடேஜா!
மதிப்பு மிக்க வீரர் விருதை பெற்ற ஜடேஜா, ரசிகர்களை கேலி செய்து ட்வீட் செய்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா
1/6

ஐ.பி.எலின் 16 ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தொடங்கியது. இந்த சீசனில் சி.எஸ்.கே அணி சில ஏற்ற இரக்கங்களை சந்தித்தாலும் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2/6

இந்நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கத்தை விட அதிகமான பேராதரவு கிடைத்தது.
3/6

மேலும், இந்த சீசன் சி.எஸ்.கே அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் தோனியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர்.
4/6

இந்நிலையில் சி.எஸ்.கே பேட்டிங் லைன் - அப்பில் தோனிக்கு முன்னதாக ஜடேஜா இருக்கும் காரணத்தால் ஜடேஜா களம் இறங்கிய உடன் தோனி..தோனி என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்வதும் ஜடேஜா அவுட் ஆனதும் கொண்டாடுவதும் சி.எஸ்.கே ஆட்டத்தின் போதும் நடக்கும் வழக்கமாகவே மாறிவிட்டது.
5/6

இது குறித்து ஒருமுறை பேசிய ஜடேஜா..அணி வெற்றி பெறும் வரை எனக்கு சந்தோசம் தான்..என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து நடந்த போட்டியில் டி.ஜே “மன்னிப்பாயா’” பாடல் ஒலிக்க செய்து ஜடேஜாவிடம் ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கோறினார்.
6/6

இந்நிலையில், நேற்று நடந்த முதலாம் குவாலிபையர் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜடேஜா ”மதிப்பு மிக்க வீரர்” விருதை பெற்றார். இதை தொடர்ந்து இந்த விருதை அளித்த விளம்பரதாரருக்கு அவர் ஒரு மதிப்பு மிக்க வீரர் என்று தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார்.
Published at : 24 May 2023 05:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















