மேலும் அறிய

திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச்.ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
திருப்பரங்குன்றம் தீபம்
 
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் நேற்றைய தினம் ஏற்ற வில்லை. இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று முன் தினம் மாலை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யக்கூடிய தமிழக அரசின் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
 
மலைக்கு மேல் செல்ல முடியாது

இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது  நீதிபதி G.R சுவாமிநாதன்  காவல் ஆணையர் லோகநாதன் காணொளி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார்.பின்னர்  காணொளி மூலமாக காவல் ஆணையர் ஆஜராகினார். இதையடுத்து 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மனுதாரர்கள் தீப தூணுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன்  தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பு நகலுடன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்கு செல்லும் மலை அடிவாரத்திற்கு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் 144 தடை உத்தரவு மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனால் தற்போது அனுமதிக்க முடியாது எனவும் கூறினார். இதனால் காவல்துறைக்கும் வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மலைக்குச் செல்லும் பாதையின் முன்பாக அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோரும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். 
 
கைது நடவடிக்கை
 
இந்நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியும் கூட யாரும் செல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட ‌அனைவரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பழங்காநத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு இருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்களை சந்தித்து பேசினார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக நிலைமையை கேட்டறிந்தார். இந்நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் இரவு 11:30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
 
ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 
 
போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய‌ பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நயினார் நாகேந்திரன் உடன் வந்த 93 பேர் உள்பட இந்து மக்கள் கட்சி ஆலய பாதுகாப்பு குழு மற்றும் பாஜகவினர் என மொத்தம் 113 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக கூடியது, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
Mattu Pongal 2026 Wishes: உழவனின் உற்ற நண்பனுக்கு மரியாதை; மாட்டுப் பொங்கலுக்கு வீரமிகு வாழ்த்துகள் லிஸ்ட்!
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Embed widget