மேலும் அறிய

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles

டிசம்பர் 14ஆம் தேதி புதுச்சேரியில் 'லட்சிய ஜனநாயக கட்சிஎன்ற பெயரில் தனது புதிய கட்சியை தொடங்க ஜோஸ் சார்லஸ் திட்டமிட்டுள்ளார். கோடிக்கணக்கில் பணம் இருந்தும், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் சென்றுதான் காரியங்களைச் சாதிக்க வேண்டிய நிலை இருப்பதால், "நாமே அதிகார மையமாக மாறினால் என்ன?" என்ற முடிவில் இவர் களமிறங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அரசியலில் அடியெடுத்து வைப்பவர்கள் ஆரம்பத்தில் ஒரு பதவியை நோக்குவார்கள். ஆனால், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினோ, ஒரு திரைப்படத்தில் கேட்பது போல, "எடுத்தவுடனே ஹூரோவா? இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை கேரக்டேரெல்லாம் பண்ணமாட்டீங்களா?" என்று வியக்கும் வண்ணம், கட்சி தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் கனவில் மிதந்துக்கொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது. "அரசியல் ஒன்றும் லாட்டரி சீட்டு விற்பது மாதிரி சாதாரணம் அல்ல, அது வியாபாரமும் அல்ல" என்று விவரம் அறிந்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், பணத்தை மட்டுமே பலமாகக் கொண்டு களத்தில் குதிக்க நினைத்த ஜோஸ் சார்லஸ்-இன் கணக்கு தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

தன்னுடைய கட்சிக்கு பலம் சேர்க்க, புதுச்சேரியில் உள்ள பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்களை விலைக்கு வாங்க சார்லஸ் தரப்பு பேரம் பேசியதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.ஆனால், இங்குதான் புதுச்சேரி அரசியல் வரலாற்றின் மிகப் பெரிய ட்விஸ்ட்
சார்லஸ் அழைத்த முக்கிய நிர்வாகிகள் பலர், பணத்தை நிராகரித்துவிட்டு, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில்சென்று அதிரடியாக இணைந்திருக்கின்றனர்.

குறிப்பாக, பாஜகவின் புதுச்சேரி மாநிலத் தலைவராக இருந்த சாமிநாதன் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இவர் பணத்தை விட தனது அரசியல் எதிர்காலம்தான் முக்கியம் என்று கூறி, விஜயின் TVK-வில் இணைந்துள்ளது, ஜோஸ் சார்லஸ் தரப்பை நிலைகுலையச் செய்துள்ளது. கட்சி தொடங்குவதற்கு முன்பே, சார்லஸின் எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற செயல்பாடுகளில் அதிருப்தியாகி, முக்கிய தலைவர்கள் ஒதுங்கியது இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதன் அதிர்ச்சியில் இருந்து மீள, வரும் தேர்தலில் விஜயின் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக ஜோஸ் சார்லஸ் தரப்பில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஒளிந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில், ஜோஸ் சார்லஸின் சொந்த மாப்பிள்ளையான ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளராகப் உள்ளார். மாமனார்-மாப்பிள்ளை இருவருக்கும் இடையே ஏற்கனவே ஏழாம் பொறுத்தமாக இருக்கும் வேளையில்  ஜோஸ் சார்லஸே வெளிப்படையாக ஆதவ் அர்ஜூனாவை சரித்திர பதிவேடு குற்றவாளிபோல செயல்பட்டார் என்று விமர்சித்த நிலையில், ஆதவ் இருக்கும் வரை சார்லஸை விஜயுடன் நெருங்க விடமாட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

ஜோஸ் சார்லஸின் சில்வர் ஸ்பூன் மனநிலை, புதுச்சேரி களத்திற்கு ஒத்துவருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், அவர் கட்சித் தொடங்கி தேர்தலை சந்திப்பதே அங்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

அரசியல் வீடியோக்கள்

Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget