மேலும் அறிய

IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை

IPL 2026 Purse Remaining All Team: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் கைவசமும் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2026 Purse Remaining All Team: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் கைவசமும் எவ்வளவு தொகையின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2026 மினி ஏலம்:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம், வரும் 16ம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. 10 அணிகளில் உள்ள 77 இடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த ஏலத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் ஆயிரத்து 300-க்கும் அதிகமான வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கான 25 வீரர்களுக்கான ஊதியத்திற்காக 120 கோடி ரூபாய் வரை செலவிடலாம். இந்நிலையில், தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கு ஊதியம் போக, மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகத்திடம் கைவசம் உள்ள தொகை என்ன, நிரப்ப வேண்டிய இடங்கள் எத்தனை என்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் அணிகளின் கைவசம் உள்ள தொகை:

1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

நடப்பாண்டு மினி ஏலத்தில் அதிக கையிருப்புடன் பங்கேற்க உள்ள அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திகழ்கிறது. அதன்படி, இந்த அணி 64 கோடியே 30 லட்சத்தை கைவசம் கொண்டுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாக வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்து, 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 வீரர்களுக்கான காலி இடத்தை கொண்டுள்ளது. அஜிங்க்யா ரகானே தலைமையிலான இந்த அணியில் ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, நரைன் உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

2. சென்னை சூப்பர் கிங்ஸ்:

இந்த மினி ஏலத்தில் அதிகப்படியான கையிருப்புடன் களம் இறங்கும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. அதன்படி, 43 கோடியே 40 லட்சத்தை வைத்துள்ளது. ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியிடமிருந்து ட்ரேட் மூலம் வாங்கி, ஜடேஜா மற்றும் சாம் கரனை பரிமாறிக் கொண்டது. இதுபோக சில வீரர்களையும் விடுவித்ததன் மூலம், 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 இடங்களை சென்னை அணி நிரப்ப வேண்டியுள்ளது.

3. சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் பங்கேற்பதற்காக 25 கோடியே 50 லட்சத்தை கைவசம் கொண்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் பல்வேறு அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள இந்த அணி, 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 வீரர்களின் இடத்தை நிரப்ப வேண்டியுள்ளது.

4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிர்வாகத்திடம், ஏலத்திற்காக 22 கோடியே 95 லட்சம் உள்ளது. 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டி உள்ளது.

5. டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி அணி ஏலத்திற்கு முன்பாக 6 வீரர்களை விடுவித்தாலும், வலுவான நட்சத்திர வீரர்களை தக்கவைத்துள்ளது. இதன் காரணமாக அணியில் நிலவும் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, அந்த அணியில் கைவசம் 21 கோடியே 80 லட்சம் உள்ளது.

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி,  16 கோடியே 40 லட்சம் கையிருப்புடன் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளது. 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 8 இடங்களை நிரப்ப இந்த அணி தீவிரம் காட்டுகிறது.

7. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 16 கோடியே 5 லட்சம் கையிருப்புடன் இந்த ஏலத்தில் களமிறங்க உள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 9 வெற்றிடங்களை நிரப்ப அணி நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது.

8. குஜராத் டைட்டன்ஸ்:

இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில், 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 5 வெற்றிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்காக அந்த அணியிடம் 12 கோடியே 90 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது.

9. பஞ்சாப் கிங்ஸ்

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இரண்டாவது இடம்பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 4 வெற்றிடங்களை கொண்டுள்ளது. இதனை நிரப்புவதற்காக அந்த அணியின் வசம் 11 கோடியே 50 லட்சம் உள்ளது. தனது பெரும்பாலான நடப்பாண்டு வீரர்களை பஞ்சாப் அணி தக்கவைத்துள்ளது.

10. மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், நடப்பாண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் குறைந்த தொகையுடன் களமிறங்கும் அணியாக உள்ளது. வெறும் 2 கோடியே 75 லட்சத்தை கைவசம் கொண்டுள்ள மும்பை, ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 5 வெற்றிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

நடைபெறுவது மினி ஏலம் என்பதால் அணி நிர்வாகங்களுக்கு RTM ஆப்ஷன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? -கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
Embed widget